முதல் மனைவியை விவாகரத்து செய்ய என்ன காரணம்.. நடிகர் பப்லு வேதனை பகிர்வு!
சென்னை : நடிகர் பப்லு தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். வில்லன் மற்றும் கேரக்டர் ரோல்களில் இவர் அதிகமாக நடித்துள்ளார்.
தற்போது சீரியல்களில் கவனம் செலுத்திவரும் பப்லு என்கிற பிரத்விராஜ், அதிகமான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
56 வயதான பிரித்விராஜ், 23 வயதான மலேசிய பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ள நிலையில், இந்த திருமணம் அதிகமான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பப்லு விவாகரத்து : நடிகர் பப்லு, சின்னத்திரையில் அதிகமான சீரியல்களில் நடித்துள்ளார். ஏராளமான தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். கே பாலசந்தரின் வானமே எல்லை என்ற படத்தில் நடித்து சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தார் பப்லு என்கிற பிரித்விராஜ். தமிழில் பாண்டிநாட்டு தங்கம், அழகன், வீரமணி, வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்துள்ள கண்ணான கண்ணே என்ற தொடரில் லீட் கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

முன்னதாக பினா என்பவரை பப்லு திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு அஹத் என்ற மகன் உள்ளார். இவருக்கு ஆட்டிசம் குறைபாடு இருந்த நிலையில், இந்த குறைபாட்டை நீக்குவதற்காக அதிகமான முயற்சிகளில் பப்லு ஈடுபட்டார். அவரது அனைத்து தேவைகளையும் தானே கவனிக்கும் வகையில், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார் பப்லு. இந்த காலகட்டத்தில்தான் பினாவிற்கும் பப்லுவிற்கும் இடையில் தகராறு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
இதையடுத்து தன்னந்தனியாக தன்னுடைய மகனை கவனித்துவந்தார் பப்லு. இடையில் கண்ணான கண்ணே சீரியலிலும் நடித்துவந்தார். இந்நிலையில்தான் மலேசியாவை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணை சமீபத்தில் பப்லு திருமணம் செய்துள்ளார். இந்த விவகாரம் பெரிய அளவில் விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திய நிலையில், வழக்கம்போல தன்னுடைய ஸ்டைலில் இவற்றிற்கெல்லாம் விளக்கம் அளித்திருந்தார் பப்லு.

தன்னுடைய புதிய வாழ்க்கையை மிகவும் சிறப்பாக துவங்கியுள்ளார் பப்லு. இந்நிலையில் தான் முதல் மனைவியை பிரிந்தது குறித்து தற்போது மனம் திறந்துள்ளார். துவக்கத்தில் இருவரும் சிறப்பான நண்பர்களாக இருந்ததாகவும் ஆனால் திருமணத்திற்கு பிறகு தங்களது வாழ்க்கையில் அதிகமான பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும் பப்லு தெரிவித்துள்ளார். தன்னை அக்கறையுடன் சாப்பிட்டாயா என்றுகூட அவர் கேட்டது இல்லை என்று தன்னுடைய முதல் திருமண வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.
இதுகுறித்து தான் அவரிடம் கேட்டால், பசித்தால் நீங்களே சாப்பிடப் போகிறீர்கள், இதையெல்லாம் கேட்க வேண்டுமா என்று அவர் பதிலளிப்பார் என்றும் பப்லு வேதனை தெரிவித்துள்ளார். ஒரு நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்துக் கொண்டபோது, உங்கள் கணவர் மிகவும் அழகாக இருப்பதாக தொகுப்பாளர் கூறியதாகவும் அதற்கு பப்லுவின் மனைவி, பப்லுவை அவமானப்படுத்தும்வகையில் யார் இவனா என்று கேட்டது தன்னை மிகவும் காயப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்தே தங்களுக்குள் அதிகமான பிரச்சினைகள் வந்ததாகவும் இதையடுத்தே இருவரும் பிரியும் முடிவை எடுத்ததாகவும் பப்லு தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து நீண்ட காலங்கள் தனிமையில் வாழ்ந்த பப்லு, மலேசியாவிற்கு சென்றபோது ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய இரண்டாவது மனைவியை சந்தித்து, அந்தப் பழக்கமே காதலாக மாறி, தற்போது திருமணம் வரை வந்துள்ளது. தனக்கு பிறகும் தன்னுடைய மகனை தன்னுடைய இரண்டாவது மனைவி சிறப்பாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் பப்லு, மற்றொரு பேட்டியில் பேசியிருந்தார்.


Click it and Unblock the Notifications











