உலகத் தரம்.. அப்பவே எப்படி எடுத்துருக்காங்க.. மைக்கேல் மதன காம ராஜன் படத்தை பாராட்டிய பிருத்விராஜ்!

சென்னை: பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ், இந்த லாக்டவுனில் வீட்டில் சூப்பர் ஹிட்டான கிளாசிக் படங்களை பார்த்து தனது நேரத்தை பயனுள்ளதாக கழித்து வருகிறார்.

Recommended Video

Lift படத்தின் கதை என்ன? | Amritha Reveals | Bigg Boss Kavin, Bigil Amritha

இந்நிலையில், சமீபத்தில் அவர் நடிகர் கமல்ஹாசன் 4 வேடத்தில் நடித்த மைக்கேல் மதன காம ராஜன் படத்தை பார்த்து பிரமித்துப் போயுள்ளார்.

மேலும், இந்த படம் உலகத்தரம் வாய்ந்த படம் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

4 கமல்

4 கமல்

1991ம் ஆண்டு சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான படம் மைக்கேல் மதன காம ராஜன். மைக்கேல், மதனகோபால், காமேஷ்வரன் மற்றும் ராஜு என 4 விதமான கதாபாத்திரங்களில் நடித்து உலகநாயகன் கமல் அசத்தி இருப்பார். இந்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதும் பணியில் கமலும் கிரேஸி மோகனும் கலக்கி இருப்பார்கள்.

மல்டி ஸ்டார் படம்

மல்டி ஸ்டார் படம்

4 கமலுக்கு நான்கு கதைகள், 3 காதலிகள், அவர்களை சுற்றிய கதாபாத்திரங்களாக குஷ்பு, ஊர்வசி, ரூபிணி, மனோரமா, நாகேஷ், நாசர், டெல்லி கணேஷ், பொன்னம்பலம், கிரேஸி மோகன், பிரவீன் குமார் சோப்டி (பீம் பாய்) என ஏகப்பட்ட பிரபல நடிகர்களை ஒன்று திரட்டி இந்த படத்தை வேறு லெவலில் உருவாக்கி இருப்பார்கள்.

அச்சடிச்சு வச்சது போல் 4 பேர பாரு

அச்சடிச்சு வச்சது போல் 4 பேர பாரு

இரட்டைப் பிறவிகள் கதைகளையே பார்த்து வந்த தமிழ் சினிமாவில், 4 குழந்தைகளும் ஒரே சாயலில் இருப்பது போன்றும், வில்லன்களின் அட்டகாசத்தால், 4 குழந்தைகளும் பிரிந்து வேறு வேறு இடங்களில் வளர்வதும், இறுதியில் வில்லன்களை ஒழித்துக் கட்ட ஒன்று கூடுவதும் என டெக்னிக்கல் ரீதியாகவும், சுவாரஸ்யமாகவும் படத்தை உருவாக்கி இருப்பார்கள்.

காமெடி கலாட்டா

காமெடி கலாட்டா

கமல்ஹாசனும், கிரேஸி மோகனும் கூட்டு சேர்ந்தால், காமெடிக்கு பஞ்சமே இருக்காது என்பதற்கு இந்த படம் ஒரு வரலாற்று சான்று என்றே சொல்லலாம். கமல், நாகேஷ், மனோரமா, ஊர்வசி, டெல்லி கணேஷ், பீம் பாய் என பல கதாபாத்திரங்களும் நடிப்பாலும், நகைச்சுவை உணர்வாலும் இப்போது பார்த்தால் கூட நம்மை பிரம்மிக்க வைத்து விடுவார்கள்.

உலகத் தரம்

உலகத் தரம்

இந்நிலையில், தற்போது பிரபல நடிகர் பிருத்விராஜ், தனது மனைவியுடன் இந்த படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்த அவர், உலகத் தரம் வாய்ந்த படம் இது என்றும், இப்போது பார்த்தால் கூட பிரம்மிப்பாக உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும், நடிகை ஊர்வசியின் நடிப்பையும் குறிப்பிட்டு பாராட்டி உள்ளார். அந்த வெத்தலப் பெட்டி காட்சிகளும் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் பாடலை யார் தான் மறக்க முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X