காவியத்தலைவன் படத்துக்கு அப்புறமா தமிழ்ல இதுக்காகத்தான் நடிக்கலை.. பிரித்விராஜ் ஓபன் டாக்!

சென்னை : நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள படம் கடுவா. இந்தப் படம் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.

Recommended Video

Herione நான்தான் Select பண்ணேன் ! | Prithviraj Speech| Kaduva Movie Press Meet *Kollywood |Fimibeat

இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்திருந்த நடிகர் பிரித்விராஜ், தமிழ் சினிமா உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

தான் தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்காததற்கான காரணத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் பிரித்விராஜ்

நடிகர் பிரித்விராஜ்

மலையாள நடிகர் பிரித்விராஜ் சிறந்த நடிகராக மட்டுமின்றி சிறந்த இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமையுடன் விளங்குகிறார். இவரது இயக்கத்தில் வெளியான லூசிபர் படம் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தில் மோகன்லால் லீட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கும் இந்தப் படம் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை கொடுக்க ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

 இயக்கம் + நடிப்பு

இயக்கம் + நடிப்பு

தொடர்ந்து இவரது இயக்கத்தில் ப்ரோ டாடி படமும் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் தந்தை -மகன் உறவு மையப்படுத்தப்பட்டுள்ளது. மலையாளத்தில் இவர் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஜனகன மண படமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது. தொடர்ந்து சிறப்பான படங்களில் இவர் நடித்து வருகிறார்.

கடுவா படம்

கடுவா படம்

தற்போது பிரித்வி நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வெளியாகவுள்ள கடுவா படம் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது. இன்றைய தினம் படம் வெளியாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது படம் ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. இதுகுறித்து பிரித்வி வருத்தம் தெரிவித்துள்ளார்.

ரிலீஸ் தேதி மாற்றம்

ரிலீஸ் தேதி மாற்றம்

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரித்விராஜ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்தப் படம் குறித்து முன்னதாக தனது பேட்டியில் மற்ற மொழிகளில் உள்ளது போன்ற ஆக்ஷன் படங்கள் மலையாளத்திலும் வரவேண்டும் என்று சினிமா லவ்வராக தான் கருதியதாகவும் அதன் வெளிப்பாடே கடுவா படம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

தொடர் பிரமோஷன்கள்

தொடர் பிரமோஷன்கள்


இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் சம்யுக்தா மேனன். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போன நிலையில் படத்தின் பிரமோஷன் எந்த வகையிலும் பாதிக்காது என்றும் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் சர்வதேச அளவில் வெளியாகவுள்ளது.

நிஜமான சம்பவத்தின் கதை

நிஜமான சம்பவத்தின் கதை

இந்தப் படம் 90களில் வாழ்ந்த கோட்டயத்தை சேர்ந்த ஒருவரின் நிஜ வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற பிரமோஷனில் இவரும் கலந்துக் கொண்டு படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

தமிழில் நடிக்காத பிரித்வி

தமிழில் நடிக்காத பிரித்வி

சென்னையில் நடைபெற்ற பிரமோஷனின்போது பேட்டியளித்த பிரித்விராஜ் காவியத்தலைவன் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்காததற்கான காரணத்தை பகிர்ந்துக் கொண்டார். இந்தப் படத்திற்கு பிறகு தமிழில் சரியான மற்றும் அழுத்தமான வாய்ப்புகள் அமையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மொழி போன்ற படங்களில் நடிக்கவேண்டும்

மொழி போன்ற படங்களில் நடிக்கவேண்டும்

மொழி போன்ற நல்ல படங்களை தமிழ் சினிமா தனக்கு வழங்கியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரித்விராஜ், அதுபோன்று யாருமே நினைத்து பார்க்காத கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதையே தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். விரைவில் தமிழ் சினிமாக்களில் நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரசிகர்களின் விருப்பம்

ரசிகர்களின் விருப்பம்

மொழி, காவியத்தலைவன் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்து, நமது ஹீரோக்களில் ஒருவராகவே அறியப்பட்டவர் பிரித்வி. இவரது இயல்பான மற்றும் காமெடி கலந்த நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். இந்நிலையில் மீண்டும் இவர் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளதாக கூறியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X