நடிகர் பிரித்விராஜ் வெளியிட்ட..மூன்று தலைமுறைகள் புகைப்படம் வைரலாகி வருகிறது!

கொச்சி : லாக் டவுன் சூழலில் நடிகர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் சந்தோசமாக பொழுதை கழித்து வரும் வேளையில் நடிகர் பிரித்விராஜ் தன்னுடைய செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடி வருகிறார்.

சில நாள்களுக்கு முன்பு இவர் வெளிநாட்டிற்கு படப்பிடிப்புக்கு சென்று அங்கிருந்து திரும்ப முடியாமல் சிக்கித் தவித்த நிலையில் ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தார்.

இவ்வாறு நிம்மதியுடன் தனது பொழுதை கழித்து வரும் பிரித்விராஜ் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

நன்கு பரிச்சயமானவர்

நன்கு பரிச்சயமானவர்

மலையாள திரைப்படத்துறையில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் நடிகர் பிரித்விராஜ் சுகுமாறன் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்து இந்தியாவில் அனைத்து மொழியினருக்கும் நன்கு பரிச்சயமானவர்.

தமிழிலும் ரீமேக்

தமிழிலும் ரீமேக்

இவர் சமீபத்தில் நடித்த ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்த நிலையில் இந்தப் படத்தை தமிழிலும் ரீமேக் செய்ய பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த படத்தின் தமிழ் ரீமேகில் நடிகர் சரத்குமார் மற்றும் சசிகுமார் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அதிகாரபூர்வ தகவல்கள் இன்னும் ஏதும் வெளியாகவில்லை.

நீண்ட போராட்டத்திற்கு

நீண்ட போராட்டத்திற்கு

எனினும் இப்போது இக்கட்டான சூழலில் படப்பிடிப்புகளில் ஏதும் இல்லாததால் வீட்டில் தங்களது குழந்தைகளுடன் பொழுதை சந்தோசமாக கழித்து வரும் பிரித்விராஜ், சில நாட்களுக்கு முன்பு தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பிற்காக ஜோர்டான் நாட்டிற்கு சென்றிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கொரானா நோய் தொற்று காரணமாக அங்கேயே சிக்கிக்கொண்டு சிலநாட்கள் தவித்து வந்தார். பின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு நாடு திரும்பி 15 நாட்களுக்கும் மேலாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார்.

 ஆச்சரியப்படும் விதமாக

ஆச்சரியப்படும் விதமாக

இப்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் வீட்டில் முடங்கியுள்ள பிரித்விராஜ் மற்றும் அவரின் சகோதரரான இந்திரஜித் தங்களது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் நேரத்தில் அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மூன்று தலைமுறைகள்

மூன்று தலைமுறைகள்

நடிகர் பிரித்விராஜ் அவரது மகள் உடன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இருப்பது போலவும், அதற்கு நேர் எதிராக அவரது சகோதரர் இந்திரஜித் அவருடைய மகளுடன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டும் இவர்கள் இருவருக்கும் நடுவில் இவர்களின் தந்தையும் நடிகருமான சுகுமாறனின் போட்டோ ஒன்று சுவற்றில் மாற்றியுள்ளது போல இருக்கும் அந்த புகைப்படத்தில் மூன்று தலைமுறைகள் ஒரு புகைப்படத்தில் உள்ளவாறு எடுக்கப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியான வாரநாட்கள்

மகிழ்ச்சியான வாரநாட்கள்

இவ்வாறு எடுக்கப்பட்ட அர்த்தமுள்ள போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மூன்று தலைமுறைகள், மகிழ்ச்சியான வாரநாட்கள் என தனது சந்தோஷத்தை இன்ஸ்டாகிராம் மூலம் பிரித்விராஜ் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Surya Karthi on board Together | Ayyapanum Koshiyum, Prithviraj, Biju Menon
அவரது ரசிகர்கள்

அவரது ரசிகர்கள்

இவ்வாறு அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் உள்ள இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தவாறு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: prithviraj sukumaran
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X