KGF 2ஐ விட சலார் மிரட்டும்.. பட அனுபவத்தை பகிர்ந்த நடிகர் பிரித்விராஜ்!
சென்னை: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக உள்ள சலார் படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பிரித்விராஜ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதில் பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.
இதில் பிரித்விராஜ் வரத ராஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் மிரட்டலான போஸ் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
இயக்கிய பிரசாந்த் நீல்: கேஜிஎஃப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கி உள்ள இந்த படம், பான் இந்திய திரைப்படமாக வரும் 22ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பிரித்விராஜ், படம் குறித்தும் தனது கதாபாத்திரம் குறித்தும் பேட்டி அளித்துள்ளார்.

வரத ராஜா கதாபாத்திரம்: அதில், வரத ராஜா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நிறைய பயிற்சி எடுக்க வேண்டி இருந்தது. அந்தக் கதாபாத்திரம் திரையில் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய இயக்குநர் பிரசாந்த் நீல் எனக்கு நிறைய விஷயங்களை சொன்னார். கதை நடக்கும் இடத்தின் வரலாறு பற்றியும், ஸ்கிரிப்ட் பற்றியும் நீண்ட நேரம் விரிவாக விளக்கினார்.
எமோஷனல் காட்சிகள்: சலார் திரைப்படம் ஒரு நல்ல ஆக்ஷன் படம், அதேசமயம், அந்த படத்தில், எமோஷன் இல்லை என்றால் அது பார்வையாளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தாது. எமோஷன் காட்சிகளை எல்லாம் மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். இப்படம் இரண்டு நண்பர்களின் நட்பு, அவர்களின் எமோஷன் பற்றிச் சொல்லும் ஆக்ஷன் படமாகும். எல்லா கதாபாத்திரமும் பிரமாதமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன, எந்தக் கதாபாத்திரத்தையும் உங்களால் தவிர்க்க முடியாது. நிச்சயம் இப்படம் நம் சினிமாவின் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றார்.
KGF 2-ஐ விட சலார் மிரட்டும்: சலார் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய இரண்டு படங்களுக்கும் இடையே நடக்கும் ஒப்பீடுகள் எனக்குப் புரிகிறது. நான் இயக்குநர் பிரசாந்த் நீலின் பெரிய ரசிகன். கேஜிஎஃப் 2க்குப் பிறகு அவருடைய அடுத்த படத்தைப் பார்த்திருந்தால் நான் ஏமாற்றமடைந்திருப்பேன். அதனால் அவரிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை, பார்வையாளர்களுக்கு இது முன்கூட்டியே தெரியவேண்டும். சலார் பார்த்தால் மக்கள் 10 நிமிடங்களில் அனைத்து ஒப்பீடுகளையும் மறந்துவிடுவார்கள். KGF 2-ஐ விட சலார் மிகவும் பெரியது மற்றும் பிரமாண்டமான படமாக இருக்கும் என்றார்.


Click it and Unblock the Notifications











