twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வெளிநாட்டில் தவித்த பிரபல ஹீரோ.. இன்று ரிட்டர்ன்.. அழைத்து வரும் சிறப்பு விமானம்!

    By
    |

    சென்னை: சென்னை: வெளிநாட்டில் சிக்கித் தவித்த பிரபல ஹீரோ, இன்று இந்தியா திரும்புகிறார்.

    Recommended Video

    Aadujeevitham Team is Back | Prithviraj Sukumaran, SupriyaMenon, Daughter, Mother • Jordan

    பிரபல மலையாள ஹீரோ பிருதிவிராஜ். இவர் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிளஸ்சி இயக்குகிறார்.

    நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகும் இந்தப் படத்துக்காக, தனது உடல் எடையை கடுமையாகக் குறைத்துள்ளார், பிருத்விராஜ்.

    சினிமாவுக்கு முழுக்குப் போட்ட முன்னாள் ஹீரோயின்.. பிரபல ஹீரோவின் தங்கை ஆவாரா..? படக்குழு முயற்சிசினிமாவுக்கு முழுக்குப் போட்ட முன்னாள் ஹீரோயின்.. பிரபல ஹீரோவின் தங்கை ஆவாரா..? படக்குழு முயற்சி

    பாலைவனத்தில்

    பாலைவனத்தில்

    இதில் நடிகைகள் அமலா பால், அபர்ணா பாலமுரளி, வினீத் ஶ்ரீனிவாசன், லக்‌ஷ்மி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் கதை வெளிநாட்டில் பாலைவனத்தில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இதில் சில வெளிநாட்டு நடிகர்களும் நடிக்க இருந்தனர்.

    கொரோனா தீவிரம்

    கொரோனா தீவிரம்

    இதையடுத்து வெளிநாட்டுப் படப்பிடிப்பை ஜோர்டானில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இயக்குனர் பிளஸ்சி, ஹீரோ பிருத்விராஜ் உட்பட சுமார் 58 பேரைக் கொண்ட இந்தப் படக்குழு ஷூட்டிங்கிற்காக, கடந்த மார்ச் மாதம் ஜோர்டான் சென்றது. அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பு நடந்தது கொண்டிருந்தபோதுதான், கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்தது.

    கட்டுப்பாடுகள்

    கட்டுப்பாடுகள்

    இந்நிலையில் ஏப்ரல் 10-ம் தேதி வரை படப்பிடிப்பை நடத்தக் கொள்ள, அந்நாட்டு அனுமதி அளித்திருந்தது. பின்னர் அங்கு கொரோனாவுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதால், படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் படக்குழு இந்தியா திரும்ப முடிவு செய்தது. ஆனால், சர்வதேச விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு விட்டதால் அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

    வெளிநாட்டு நடிகர்கள்

    வெளிநாட்டு நடிகர்கள்

    இதுபற்றி நடிகர் பிருத்விராஜ் உருக்கமாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். பின்னர், இந்தப் படக்குழு ஷூட்டிங்கை அங்கு மீண்டும் ஆரம்பித்தது. 'பிருத்விராஜ் தொடர்பான காட்சிகளை எடுத்து முடித்துவிட்டோம். அவர் இல்லாத மற்றக் காட்சிகளை படமாக்கி வருகிறோம். இதில் சில வெளிநாட்டு நடிகர்களும் நடிக்க இருந்தனர். லாக்டவுன் காரணமாக அவர்களால் வரமுடியவில்லை என்று படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன், தெரிவித்து இருந்தது.

    முடிந்து விட்டது

    முடிந்து விட்டது

    இந்நிலையில் ஆடுஜீவிதம் படத்தின் ஷூட்டிங் ஜோர்டானில் முடிந்துவிட்டதாக நடிகர் பிருத்விராஜ் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். மொத்தப் படக்குழுவும் எடுத்த செல்பி போட்டோவையும் அவர் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவர் மனைவி சுப்ர்யா, இனி எல்லாரும் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    சிறப்பு விமானம்

    சிறப்பு விமானம்

    இந்நிலையில் ஜோர்டானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு சிறப்பு விமானத்தை இயக்கியுள்ளது. இந்த விமானம் இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லி திரும்புகிறது. இதில் நடிகர் பிருத்விராஜ், பிளஸ்சி உள்ளிட்ட படக்குழுவினர் திரும்புகின்றனர். பின்னர் அங்கிருந்து கொச்சி வருகின்றனர். பின்னர் அவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தபட உள்ளனர்.

    ஆங்கிலத்தில்

    ஆங்கிலத்தில்

    இதுபற்றி பிருதிவிராஜின் மனைவி சுப்ரியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மகள் எழுதியது போல, 'எங்க அப்பா வந்துகிட்டிருக்காங்க' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். குட்டி இப்பவே ஆங்கிலத்தில் எழுதுதே என்று சிலர் கூறியுள்ளனர்.

    காவியத் தலைவன்

    காவியத் தலைவன்

    இதையடுத்து 82 நாட்களுக்குப் பிறகு தனது குடும்பத்துடன் இணைகிறார், நடிகர் பிருத்விராஜ். மலையாள நடிகரான இவர், தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் நடித்துள்ளார்.

    English summary
    actor Prithviraj, director Blessy and crew of ‘Aadujeevitham’ who got stranded in Jordan amid the lockdown over coronavirus outbreak, will fly to Kerala on Friday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X