For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  போன வருஷம் விஷுவுக்கு அவர் இருந்தார்.. கொரோனா செய்த கொடூரம்.. பிரிவால் வாடும் பிருத்விராஜ் மனைவி!

  |

  கேரளா: கொரோனா லாக்டவுனால் ஜோர்டானில் சிக்கித் தவிக்கிறார் நடிகர் பிருத்விராஜ். கணவன் இல்லாததால், இந்த ஆண்டு விஷு பண்டிகை களையிழந்து போய்விட்டதாக அவரது மனைவி உருக்கமான பதிவை போட்டுள்ளார்.

  Mohanlal Huge response and Motivates Corona Service | Covid-19

  மலையாள நடிகரான பிருத்விராஜ் தமிழில் கனா கண்டேன், மொழி, காவியத் தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

  தமிழ், மலையாளம் மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு மொழிப் படங்களிலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

   அட்லியின் அந்தகாரம் டிரைலர் ரிலீஸ்.. மிரட்டும் அர்ஜுன் தாஸ்.. பக்காவா இருக்கு மாஸ்டர் ரெஃபரன்ஸ்! அட்லியின் அந்தகாரம் டிரைலர் ரிலீஸ்.. மிரட்டும் அர்ஜுன் தாஸ்.. பக்காவா இருக்கு மாஸ்டர் ரெஃபரன்ஸ்!

  தேசிய விருது

  தேசிய விருது

  மலையாள திரையுலகின் நட்சத்திர நடிகராக திகழும் பிருத்விராஜ், 2011ம் ஆண்டு வெளியான இந்தியன் ருப்பி படத்திற்காக பல மாநில விருதுகளை பெற்றுள்ளார். மேலும், அந்த படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. காவியத் தலைவன் படத்திற்காக சிறந்த வில்லன் விருதை தமிழக அரசு வழங்கி இருக்கிறது.

  பிளாக்பஸ்டர்

  பிளாக்பஸ்டர்

  ஹீரோவாக நடித்து வந்த பிருத்விராஜ் இயக்குநர் அவதாரமெடுத்து இயக்கிய லூசிஃபர் திரைப்படம் நூறு கோடி பாக்ஸ் ஆஃபிஸில் இணைந்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுத் தந்தது. மோகன் லால், விவேக் ஓபராய், மஞ்சு வாரியர் என நட்சத்திர பட்டாளமே நடித்த அந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய போட்டியிட்டு வருகின்றனர்.

  அய்யப்பனும் கோசியும்

  அய்யப்பனும் கோசியும்

  இயக்குநர் சாச்சி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி வெளியான அய்யப்பனு கோசியும் திரைப்படத்தில் நடிகர் பிஜு மேனன் மற்றும் பிருத்விராஜ் சரி நிகர் நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளனர். ஒரு ரிட்டயர்ட் ராணுவ வீரனுக்கும், ரிட்டயர்ட் ஆகப் போகும் போலீஸ் அதிகாரிக்கும் இடையே நடக்கும் ஈகோ சண்டையை இயக்குநர் ரியாலிட்டியுடன் கொடுத்துள்ளார்.

  ஜோர்டானில்

  ஜோர்டானில்

  பிருத்விராஜின் அடுத்த படமான ஆடுஜீவிதம் படத்தின் ஷூட்டிங்கை நடத்த ஜோர்டான் சென்ற படக்குழுவினர் கொரோனா லாக்டவுனால், நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். பிருத்விராஜ் உடன் படக்குழுவை சேர்ந்த 53 பேர் இந்தியா திரும்ப பல முயற்சிகளை மேற்கொண்டும் எதுவும் இதுவரை பலனளிக்கவில்லை.

  மனைவி வருத்தம்

  தமிழர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடி வருவது போல, இதே நாளில் மலையாளிகள் விஷு பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஆனால், கடந்த ஆண்டு விஷு பண்டிகைக்கு உடன் இருந்து விஷு விருந்து உண்ட கணவன், தற்போது நாடு திரும்ப முடியாமல் தவித்து வருவதால், பிருத்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் வருத்தத்துடன் ஒரு நெகிழ்ச்சி பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  கவலை படாதீங்க

  கவலை படாதீங்க

  மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பிருத்விராஜின் மனைவி, மனம் வருந்தி இப்படியொரு பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர, அதனை பார்த்த பிருத்விராஜின் ரசிகர்கள், கவலைப்படாதீங்க சீக்கிரம் பிருத்விராஜ் நலமுடன் நாடு திரும்புவார், உங்களுக்கு எந்தவித கஷ்டமும் வராது என கடவுளை பிரார்த்தித்தும் ஆறுதல் கூறியும் வருகின்றனர்.

  English summary
  Prithviraj who stuck in Jordan due to Corona lock down not able to come to home town for Vishu celebration. His wife Supriya Menon post a heart wrenching post.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X