Aadujeevitham: 25 நாட்கள்.. 150 கோடி ரூபாய் வசூல்.. ஆடு ஜீவிதம் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: நடிகர் பிரித்விராஜ், அமலா பால் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசானது ஆடு ஜீவிதம். பென் யாமின் என்ற எழுத்தாளர் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆடு ஜீவிதம் என்ற நாவலை மையமாக கொண்டு இயக்குநர் பிளெஸ்ஸி இந்தப் படத்தை உருவாக்கியிருந்தார். இந்தப் படத்தை திரையில் கொண்டுவர அவருக்கு 16 ஆண்டுகள் பிடித்தது.

உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான நாவலை மையமாக கொண்டு அதே பெயரில் வெளியாகியுள்ளது ஆடு ஜீவிதம் படம். இந்தப் படத்திற்காக படக்குழுவினர் மிகப்பெரிய பிரயத்தனங்களை செய்தது படத்தின் பல இடங்களில் தெரிந்தது. இந்தப் படம் முதல் வாரத்தில் சர்வதேச அளவில் 47 கோடி ரூபாய்களை வசூலித்த நிலையில், அடுத்தடுத்த வாரங்களில் படத்தின் வசூல் குறைந்தது. அடுத்தடுத்த படங்களின் வரவு உள்ளிட்டவை இதற்கு காரணங்களாக அமைந்தன.

Actor Prithviraj s Aadujeevitham movie collects 150 crores in just 25 days

நடிகர் பிரித்விராஜ்: நடிகர் பிரித்விராஜ் அடுத்தடுத்த தளங்களில் தன்னை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என தான் ஈடுபடும் தளங்களில் எல்லாம் மாஸ் காட்டி வருகிறார். இவரது இயக்கத்தில் இரு படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் அடுத்ததாக எம்புரான் படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி பிரித்விராஜ், அமலா பால் நடிப்பில் வெளியான ஆடு ஜீவிதம் படம் படத்தின் வசூல் நிலவரம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் வெளியாகி 25 நாட்களில் இதுவரை சர்வதேச அளவில் 150 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது.

ஆடு ஜீவிதம் படம்: உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு எழுதப்பட்ட ஆடு ஜீவிதம் நாவலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் கடந்த 16 ஆண்டுகளாக சிரமேற்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நடிகர் பிரித்விராஜ் மற்றும் இயக்குநர் பிளெஸ்ஸியின் கூட்டணியில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியானது. படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், அந்த எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து வெற்றிப்படமாக அமைந்தது. முதல் வாரத்தில் 47 கோடி ரூபாய்களை சர்வதேச அளவில் இந்தப் படம் வசூலித்தது.

25 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல்: இந்நிலையில் மற்ற படங்களின் ரிலீஸ் உள்ளிட்ட காரணங்களால் அடுத்தடுத்த வாரங்களில் படத்தின் வசூல் குறைந்தது. இரண்டாவது வாரத்தில் 21.15 கோடி ரூபாய்களை இந்தப் படம் வசூலித்தது. மூன்றாவது வாரத்தின் இறுதியில் 10,2 கோடி ரூபாய்களை மட்டுமே படம் வசூலித்தது. இந்நிலையில் இந்நிலையில் 25 நாட்கள் இறுதியில் ஆடு ஜீவிதம் படம் சர்வதேச அளவில் 150 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது. இதுகுறித்து படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்தப் படம் அதன் மேக்கிங்கிற்காக பல தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

மணிரத்னம் பாராட்டு: முன்னதாக படத்தை பார்த்த இயக்குநர் மணிரத்னம் மிகவும் வியப்படைந்து பாராட்டி செய்தி அனுப்பியிருந்தார். இந்தப் படத்தின் முக்கியமான தூணாக நடிகர் பிரித்விராஜ் காணப்படுகிறார். படத்தின் வலிமையான அடுத்த பார்ட் என்றால் அது படத்தின் இசைதான். படத்திற்கு தன்னுடைய முழுமையான திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார் ஏஆர் ரஹ்மான். படத்தின் வெற்றிக்கு சுனிலின் ஒளிப்பதிவு மிகவும் முக்கியமான காரணமாக அமைகிறது. கேரளாவின் பசுமை மற்றும் பாலைவனத்தின் வறட்சி போன்றவற்றை மிகச்சிறப்பாக பார்வையாளர்களுக்கு அவர் கடத்துகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X