The Goat Life: பிரித்விராஜின் கலக்கல் காம்பினேஷன்.. தி கோட் லைஃப் பட ரிலீசை அறிவித்த இசைப்புயல்!

சென்னை: நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிப் படங்களில் நடித்துவருபவர். சர்வதேச அளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சலார் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் பிரித்விராஜின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இந்நிலையில் பிரபல இயக்குநர் பிளெஸ்ஸி இயக்கத்தில் தி கோட் லைஃப் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரித்விராஜ்.

விஷுவல் ரொமான்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், அமலா பால், கேஆர் கோகுல் மற்றும் பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி, ரிக்காபி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை மற்றும் ஒலி வடிவமைப்பு பணிகளை ஏஆர் ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். பிரபல நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீசை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Prithvirajs The Goat life movie release date announced by Music director AR Rahman

நடிகர் பிரித்விராஜ்: நடிகர் பிரித்விராஜ் அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். துவக்கத்திலிருந்தே மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, இந்திப்படங்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக மாறியுள்ளார். தமிழில் மொழி உள்ளிட்ட படங்களில் இவரது அற்புதமான நடிப்பு தற்போதும் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவங்களை கடத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது தன்னுடைய வயதுக்கு ஏற்ற சிறப்பான பல படங்களை கொடுத்து வருகிறார். இவரது கதைத்தேர்வு பிரமிக்க வைக்கிறது. நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி ரசிகர்களை சிறப்பாக உணர வைத்து வருகிறார் பிரித்விராஜ்.

தி கோட் லைஃப் படம்: சமீபத்தில் இவரது நடிப்பில் சலார் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தில் பிரபாசுக்கு இணையான கேரக்டரில் பிரித்விராஜ் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் வசூலில் சிறப்பாக அமைந்துள்ளது. இந்நிலையில் அடுத்தாக பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள தி கோட் லைஃப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு சர்வைவல் அட்வென்சர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பிரித்விராஜுடன் ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், அமலா பால், கேஆர் கோகுல் மற்றும் அரபு நடிகர்கள் தலிப் அல் பலுஷி, ரிக்காபி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

ரிலீஸ் தேதியை அறிவித்த இசைப்புயல்: படத்திற்கு இசை மற்றும் ஒலி வடிமைப்பை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து ஏஆர் ரஹ்மான் தன்னுடைய சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். எந்த விஷயத்தையும் விட்டுக் கொடுக்காத ஒரு மனிதனின் வாழ்க்கையை சொல்லும் படம் தி கோட் லைஃப் வரும் ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளதையடுத்து அதன் போஸ்டர்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Actor Prithvirajs The Goat life movie release date announced by Music director AR Rahman

பிரம்மாண்ட தயாரிப்பு: மலையாள திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக அதிகமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான ஆடுஜீவிதம் நாவலை மையமாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உள்பட 12 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்த நாவலை படமாக்குவது தனக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்ததாக இயக்குநர் பிளெஸ்ஸி முன்னதாக பேட்டியொன்றில் கூறியிருந்தார். அந்த முயற்சியில் அவர் வெற்றியடைந்திருப்பார் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X