Actor Pugazh: திரையில் கதையின் நாயகனாக.. Mr Zoo keeper பட ரிலீசை அறிவித்த புகழ்!

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, அது இது எது, குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளின்மூலம் ஏராளமான ரசிகர்களின் ஃபேவரிட்டாக மாறியவர் நடிகர் புகழ். குறிப்பாக குக் வித் கோமாளியின் அடுத்தடுத்த சீசன்களில் கோமாளியாக ஷிவாங்கி, பாலா உள்ளிட்டவர்களுடன் இணைந்து இவர் செய்த சேட்டைகளுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சில நேரங்களில் ஓவரா போற குமாரு என்று ரசிகர்கள் அங்கலாய்த்தாலும் இவரது சேட்டைகளை தொடர்ந்து ரசிக்கவே செய்தனர். இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சீசன்கள் களைகட்ட இவரும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தார்.

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசனிலும் கோமாளியாக இவர் இணைந்துள்ளார். இதற்கான ப்ரமோ கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் அதில் அனைவரும் விமானத்தில் வந்திருக்க, வழக்கம்போல வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்டதாக சைக்கிளில் வந்தபடியே புகழ் புலம்பியதை பார்க்க முடிந்தது. இந்த ஷோ இவருக்கு அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுத் தந்துள்ளது. இதனிடையே Mr Zoo Keeper என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து முடித்துள்ளார் புகழ். இந்தப் படம் ரிலீசுக்காக காத்திருந்த நிலையில் தற்போது ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

Actor Pugazh announced his Mr Zoo keeper movie release date in instagram

நடிகர் புகழ்: நடிகர் புகழ் சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்து நல்ல புகழை பெற்று வருபவர். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு, அது இது எது, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றி தன்னுடைய சிறப்பான பர்பார்மென்ஸ் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் புகழ். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சீசன்களில் இவரை தொடர்ந்து பார்க்க முடிகிறது. விரைவில் துவங்கவுள்ள அடுத்த சீசனிலும் இவர் பங்கேற்கவுள்ளார். சமீபத்தில் வெளியான நிகழ்ச்சியின் ப்ரமோவில் அனைவரும் விமானத்தில் வந்திறங்க வழக்கம்போல புலம்பலுடன் புகழ் சைக்கிளில் வந்ததை பார்க்க முடிந்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி: முந்தைய சீசன்களில் ஷிவாங்கி, பாலா, குரேஷி, சுனிதா உள்ளிட்டவர்களுடன் இணைந்து கோமாளியாக வேறு லெவலில் கலக்கி நிகழ்ச்சியின் ஹிட்டிற்கு முக்கியமான காரணமாக அமைந்தார் புகழ். இந்த நிகழ்ச்சியின் இந்த சீசனில் ஷிவாங்கி உள்ளிட்ட சிலருக்கு பதிலாக ராமர் உள்ளிட்ட கோமாளிகள் இணைந்துள்ளனர். இதனால் இந்த சீசன் அதிரடி சரவெடியாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இந்த சீசனில் குரேஷி, சுனிதா உள்ளிட்டவர்களும் உள்ளனர். முன்னதாக கோமாளியாக இருந்த மணிமேகலை இந்த சீசனில் ரக்ஷனுடன் இணைந்து ஆங்கராக மாறியுள்ளார்.

சினிமா வாய்ப்புகள்: இந்த நிகழ்ச்சிமூலம் சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்று வருகிறார் புகழ். கைதி, வலிமை, எதற்கும் துணிந்தவன், ஆகஸ்ட் 16 1947 உள்ளிட்ட படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள புகழ், Mr Zoo keeper, துடிக்கிறது மீசை போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார். இதில் Mr Zoo keeper படத்தின் ரிலீஸ் குறித்து தற்போது அறிவித்துள்ளார். வரும் மே மாதம் 3ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். நீண்டநாள் காத்திருப்புக்கு பலனாக முதல்முறையாக திரையில் நாயகனாக தோன்றவுள்ளதாகவும் புகழ் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

Mr Zoo keeper ரிலீஸ் தேதி: தன்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் தன்னுடைய நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். சுரேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளது மிகப்பெரிய கவனத்தை கொடுத்துள்ளது. படத்தில் புலியுடன் இணைந்து நடித்த காட்சிகள் குறித்து முன்னதாக பேட்டிகளில் புகழ் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் இந்தப் படம் ரசிகர்களுக்கு எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X