Pugazh daughter Naming ceremony: ரீமகளின் தொட்டில் விழா.. வீடியோ வெளியிட்டு புகழ் குதூகலம்!
சென்னை: நடிகர் புகழ் விஜய் டிவியின் குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர்.
இந்த நிகழ்ச்சியின்மூலம் ஏராளமான ரசிகர்களை மட்டுமில்லாமல் பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.
சபாபதி, எதற்கும் துணிந்தவன், வலிமை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள புகழ் தற்போது மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

நடிகர் புகழ்: நடிகர் புகழ் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர். இந்த நிகழ்ச்சிகளின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஷிவாங்கியுடன் இணைந்து இவர் செய்த அலப்பறைகளை ஏராளமான ரசிகர்கள் கண்டு களித்தனர். இவர்களின் லூட்டியால் இந்த நிகழ்ச்சி களைகட்டியது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிகள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை மட்டுமில்லாமல் பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்து வருகிறது.
அடுத்தடுத்த படங்கள்: சபாபதி, எதற்கும் துணிந்தவன், வலிமை என கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ள புகழ், தொடர்ந்து தற்போது மிஸ்டர் ஜூ கீப்பர் என்ற படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார். வடிவேலு, சந்தானம், யோகிபாபு, சூரி வரிசையில் நகைச்சுவை நடிகராக இருந்து குறுகிய காலத்திலேயே ஹீரோவாக உயர்ந்துள்ளார் புகழ். அவரது இந்த வளர்ச்சிக்கு ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
திருமணம்.. குழந்தை: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தன்னுடைய நீண்ட நாள் காதலி பென்ஸியாவை கோயிலில் எளிமையான முறையில் திருமணம் செய்துக் கொண்டார் புகழ். இவரது திருமணத்திற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்தனர். தொடர்ந்து பென்சியா கர்ப்பமாக இருந்த விஷயத்தையும் சமூக வலைதளம் மூலமாக அறிவித்தார் புகழ். அதன் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
மகளின் தொட்டில் விழா: தொடர்ந்து தன்னுடைய மகளின் பெயரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார் புகழ். மகளின் பெயர் ரித்தன்யா என்று அவர் அறிவித்திருந்த நிலையில் தற்போது தன்னுடைய மகளின் தொட்டில் விழாவையும் நடத்தி முடித்துள்ளார் புகழ். தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சூழ நிகழ்ச்சியை நடத்தி முடித்துள்ளார். இதன் வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மிகவும் கலர்புல்லான இந்த வீடியோவை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர்.
மகள் பெயர் ரித்தன்யா: தொடர்ந்து நாயகனாகவும் காமெடி நடிகராகவும் நடித்து வருகிறார் புகழ். முன்னதாக தன்னுடைய மகள் குறித்து அவர் வெளியிட்டிருந்த வீடியோவில் தன்னுடைய மகளை மகாராணி என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை என்றும் ஆனாலும் தன்னுடைய மகள் தனித்து தெரியவே ரித்தன்யா என்று பெயர் சூட்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அவரது மகள் பிளந்த சில வாரங்கள் ஆனபோதிலும் தொடர்ந்து புகழுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications