Mr Zoo Keeper படம் குறித்து அப்டேட் சொன்ன புகழ்.. அவருக்கு இவ்ளோ அழகான ஹீரோயினா?

சென்னை : நடிகர் புகழ் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளின்மூலம் ரசிகர்களை அதிகமான அளவில் ஈர்த்தவர்.

குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவருக்கு ஏராளமான ரசிகர்களை மட்டுமில்லாமல் பட வாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது.

தற்போது Mr Zoo Keeper என்ற படத்தின்மூலம் ஹீரோவாகவும் மாறியுள்ளார் புகழ். தற்போது இந்தப் படத்தின் நாயகிக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் புகழ்.

நடிகர் புகழ்

நடிகர் புகழ்

நடிகர் புகழ் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தியவர். ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை ஏராளமான ரசிகர்களிடையே கொண்டு சேர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கியுடன் இணைந்து இவர் செய்யும் சேட்டைகள் வேற லெவல் ரகம். ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி சீசனாக மட்டுமில்லாமல் தொடர்ந்து ஒளிபரப்பட வேண்டும் என்று கேட்கும் அளவிற்கு நிகழ்ச்சி அதிக ரீச் ஆகியுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 4ல் புகழ்

குக் வித் கோமாளி சீசன் 4ல் புகழ்

தற்போது 4வது சீசனை ஒளிபரப்பி வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் அதிகமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் பாலா இடம்பெறவில்லை. கோமாளியாக இருந்த ஷிவாங்கி குக்காக மாறியுள்ளார். ஆனாலும் கடந்த சீசனில் அதிகமாக இடம்பெறாத புகழ், தற்போது 4வது சீசனில் முழுமையாக கோமாளியாக ஈடுபட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். குக்காக மாறியபோதிலும் தன்னுடைய தங்கை ஷிவாங்கியுடன் இணைந்து மாஸ் காட்டி வருகிறார்.

அடுத்தடுத்த படங்களில் புகழ்

அடுத்தடுத்த படங்களில் புகழ்

சினிமாவிலும் வலிமை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்கள் புகழ் நடிப்பில் வெளியான நிலையில், தற்போது காசேதான் கடவுளடா படத்தில் ஷிவாங்கியுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் MR Zoo Keeper என்ற படத்தில் ஹீரோவாக இணைந்துள்ளார் புகழ். இந்தப் படத்தின் சூட்டிங் பிலிப்பைன்சில் நடைபெற்ற நிலையில் விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் அப்டேட் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகழ் தெரிவித்துள்ளார்.

நாயகிக்கு பிறந்தநாள் வாழ்த்து

நாயகிக்கு பிறந்தநாள் வாழ்த்து

படத்தின் நாயகி ஷிரின் கஞ்ச்வாலாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ள புகழ், MR Zoo Keeper படம் இருவருக்கும் சிறப்பான நட்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீசுக்காக தான் அதிக ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் விரைவில் படத்தின் ஆடியோ லாஞ்ச் நடைபெறவுள்ளதாகவும் புகழ் அப்டேட் தெரிவித்துள்ளார். இதையடுத்து புகழிற்கு ஷிரிங்கா சாவ்லாவும் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்த கெட்டப்புகள்

அடுத்தடுத்த கெட்டப்புகள்

நடிகர் புகழ், தற்போது குக் வித் கோமாளி ஷோவின் 4வது சீசனில் அதிகமாக காணப்படும் நிலையில் ஒவ்வொரு வாரமும் சிறப்பான பல கெட்டப்புகளை போட்டு வருகிறார். காந்தாரா படத்தின் கெட்டப், பெண் கெட்டப் என அடுத்தடுத்த் இவரது கெட்டப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. சமீபத்தில் காந்தாரா படத்தின் கெட்டப்பிற்காக தான் 4 மணிநேரம் மேக்கப் போட்டதாகவும் அதன் மேக்கப் வீடியோவையும் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் புகழ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X