பிஜிலி ரமேஷை ஞாபகம் இருக்கிறதா?..அவர் குடும்பம் இப்போ எப்படி இருக்கு தெரியுமா?..மறக்காத பிரபல நடிகர்

சென்னை: தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் ஒளிபரப்பான பிராங்க் ஷோ மூலம் வெகு பிரபலமடைந்தவர் பிஜிலி ரமேஷ். அந்த பிராங்க் வெளியான சமயத்தில் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்துக்குரிய் நபராக மாறினார் ரமேஷ். அதன் பிறகு காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட சில படங்களில் நடிக்கவும் செய்தார். ஆனால் அவருக்கு இருந்த குடி பழக்கம் அவரை படுக்கையில் தள்ளியது. சிகிச்சை எடுத்துவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் காரணமாக அவரது குடும்பம் நிலைகுலைந்து போயிருந்தது. அவரது குடும்பத்தை பலர் மறந்துவிட்ட சூழலில் பிரபல நடிகர் தன்னால் முடிந்த உதவியை செய்திருக்கிறார்.

ஸ்மார்ட் ஃபோன்களின் அசுரத்தனமான வளர்ச்சி காரணமாக; சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட காலம் இது. அப்போதெல்லாம் பிரபலமாக வேண்டும் என்றால் சினிமாவில் கஷ்டப்பட்டு அறிமுகமாகி; அதில் கடுமையாக உழைத்தால்தான் நடக்கும். ஆனால் இப்போது சமூக வலைதளங்கள் பெருகிவிட்டதால் அதன் மூலமே பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அது ஒருவகையில் ஆரோக்கியமான விஷயமும்கூட. மேலும் அது பலருக்கும் பல விதத்தில் ஊக்கமாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Pugazh has helped the family of late actor Bijili Ramesh

பிரபலமான பிஜிலி ரமேஷ்: அப்படி சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர்தான் பிஜிலி ரமேஷ். தனியார் யூட்யூப் சேனல் ஒன்று பொதுமக்களை பிராங்க் செய்வது வழக்கமாக வைத்திருந்தது. அப்படி அவர்கள் சராசரியாக பிராங்க் செய்ததுதான் பிஜிலி ரமேஷ். அதில் அவர் பேசிய விதம், அவரது நடவடிக்கைகள் அனைத்துமே சமூக வலைதளவாசிகளால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இதனால் ஓவர் நைட்டில் ஃபேமஸ் ஆனார் ரமேஷ்.

பட வாய்ப்புகள்: பிரபலமாகிவிட்ட பிஜிலி ரமேஷுக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தன. அதன்படி நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் நடித்தார். பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்தார். மேலும் நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்த அவர்; தொடர்ந்து தனியார் சேனல் ஒன்றில் நடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். சூழல் இப்படி இருக்க கடந்த சில காலமாகவே பிஜிலி ரமேஷ் பற்றி எதுவும் தெரியாமல் இருந்தது.

Actor Pugazh has helped the family of late actor Bijili Ramesh

உயிரிழந்த பிஜிலி ரமேஷ்: ஆனால் குடி பழக்கத்துக்கு அடிமையான ரமேஷ் அதன் காரணமாக கல்லீரல் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக மாறினார் என்ற செய்தி முதலில் வெளியாகி பிறகு உறுதியானது. அதாவது தனது நிலைமை குறித்து உருக்கமாக அவரே பேட்டியளித்திருந்தார். சூழல் இப்படி இருக்க சிகிச்சை எடுத்துவந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் உயிரிழந்தார். இதன் காரணமாக அவரது குடும்பம் நிலைகுலைந்து போயிருந்தது. அவருக்கு ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி இருக்கிறது குடும்பம்?: ரமேஷ் உயிரிழந்தபோது விஜே சித்து உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து; தங்களால் முடியும் உதவிகளை செய்ய முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு பிறகு அந்தக் குடும்பத்தின் நிலை என்ன? பிஜிலி ரமேஷுடைய மகனின் கல்வி நிலை உள்ளிட்ட விஷயங்கள பலரும் கண்டுகொள்ளவில்லை என்றே தெரிகிறது. இந்நிலையில் பிஜிலி ரமேஷின் குடும்பத்துக்கு விஜய் டிவி நடிகர் புகழ் செய்திருக்கிறார். இதுகுறித்து ரமேஷின் மனைவியே பேசியிருக்கிறார்.

புகழ் செய்த உதவி: அவர் ஒரு பேட்டியில் பேசுகையில், "விஜய் டிவி புகழ் தம்பிக்கு ரொம்ப நன்றி சொல்லிக்கொள்கிறேன். வீட்டு வாடகை கட்ட முடியவில்லை. தம்பியிடம் நான் அதுதொடர்பாக உதவி கேட்டேன். உடனே எதைப் பற்றியும் யோசிக்காமல் நேராக வீட்டுக்கு வந்து 5,000 ரூபாய் வாடகை கொடுத்தார். பிறகு செலவுக்கு மூன்றாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு; பத்திரமாக இருங்கள் அக்கா" என்று சொல்லி சென்றதாக தெரிவித்தார். இதனை பார்த்த ரசிகர்களோ புகழுக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X