காந்தாரா கெட்டப்பில் மிரட்டிய புகழ்.. என்ன மேக்கப் போடவே 4 மணிநேரம் ஆச்சா?
சென்னை : நடிகர் புகழ் விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின்மூலம் பிரபலமானவர்.
இந்த நிகழ்ச்சிகளின்மூலம் இவருக்கு ஏராளமான படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆயினும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் தொடர்ந்து தன்னுடைய சிறப்பான கோமாளித்தனங்களை அரங்கேற்றி வருகிறார் புகழ்.

குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி
விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளின்மூலம் சிறப்பான புகழை அடைந்துள்ளார் புகழ். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்தடுத்த சீசன்களில் சிறப்பான பங்களிப்பை கொடுத்துவரும் புகழ், தற்போது 4வது சீசனிலும் அடுத்தடுத்த எபிசோட்களில் பங்கேற்று வருகிறார்.

காந்தாரா லுக்கில் புகழ்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடந்த சீசனில் அதிகமாக பங்கேற்காத புகழ், தற்போது 4வது சீசனில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள் பல்வேறு விதமான கெட்டப்புகளில் வலம்வருவது வழக்கமான ஒன்றுதான். இந்நிலையில் காந்தாரா லுக்கில் புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தோன்றி அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கினார்.

பஞ்சுருளி தெய்யம் நடனக்கலைஞர்
காந்தாரா படத்தில் வரும் பஞ்சுருளி தெய்யம் நடனக் கலைஞர் போன்று வேடமிட்டு நேற்றைய தினம் புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தோன்றி அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கினார். சில போட்டியாளர்கள் கண்கலங்கியதையும் நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. இந்த கெட்டப்பில் 2 நிமிடங்கள் அவர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

மேக்கப் போட 4 மணிநேரம்
இந்த மேக்கப்பை தனக்கு போட 4 மணிநேரங்கள் ஆனது என்று வீடியோவுடன் புகழ் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். இந்த மேக்கப்பை தனக்கு போட்ட நபருக்கும் மற்றும் பஞ்சுருளி தெய்யம் நடனக்கலைஞர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார். இந்தப் படத்தின்மூலம் மக்களை வியந்து பார்க்க வைத்தவர் ரிஷப் ஷெட்டி என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ரசிகர்களுக்கு நன்றி
அதிலிருந்து ஒரு சிறு துளியை மக்களிடம் கொண்டு சேர்த்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் புகழ் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் ரசிகர்களுக்கும் புகழ் நன்றி தெரிவித்துக் கொண்டார். முன்னதாக இதுபோன்ற பல கெட்டப்புகளை போட்டு அனைவரையும் புகழ் கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











