சும்மா கேப்ல அடிச்சு விட்ட விஜய் டிவி புகழ்.. கூட யார் இருக்காங்கன்னு பாருங்க

சென்னை : நடிகர் புகழ் விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர். ஏராளமான பட வாய்ப்புகளை பெற்று வருபவர்.

விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

விரைவில் இவருக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தன்னுடைய நீண்ட நாள் காதலியை இவர் மணக்கவுள்ளார்.

நடிகர் புகழ்

நடிகர் புகழ்

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் புகழ். இந்த நிகழ்ச்சியின் சீசன் 2 சிறப்பான வெற்றியை பெறுவதற்கு இவரது கோமாளித்தனங்களும் மிகவும் முக்கியமான காரணமாக அமைந்தது. ஷிவாங்கி, மணிமேகலை, பாலா உள்ளிட்டவர்களுடன் இணைந்து இவர் அடித்த கோமாளித்தனங்கள் வைரலாகின.

ஏராளமான பட வாய்ப்புகள்

ஏராளமான பட வாய்ப்புகள்

இந்த நிகழ்ச்சி இவருக்கு ஏராளமான ரசிகர்களையும் பிரபலத்தையும் பெற்றுத் தந்தது. இதையடுத்து இவர் தற்போது சந்தானம், விஜய் சேதுபதி, மிர்ச்சி சிவா உள்ளிட்டவர்களுடன் இணைந்து இவர் நடித்து வருகிறார். தொடர்ந்து பல புராஜக்ட்களில் கமிட்டாகி வருகிறார். மிஸ்டர் ஜு கீப்பர் என்ற படத்திலும் ஹீரோவாக கமிட்டாகி நடித்து வருகிறார்.

செப்டம்பர் 5ல் திருமணம்

செப்டம்பர் 5ல் திருமணம்

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய நீண்ட நாள் காதலியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய புகழ், சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய திருமணத்தையும் அறிவித்தார். தன்னுடைய காதலியுடன் போட்டோஷுட் நடத்தி இதனை வெளிப்படுத்தினார் புகழ். தற்போது இவர்களின் திருமண பத்திரிகையும் தயாராகியுள்ளது.

காதலியுடன் புதிய வீடியோ

காதலியுடன் புதிய வீடியோ

வரும் செப்டம்பர் 5ம் தேதி இவர்களுடைய திருமணம் நடைபெறவுள்ள நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய காதலியுடன் சும்மா கேப்ல ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். புகழ் அடையாரில் பெரிய பங்களா வாங்கித் தருகிறேன் என்று கூற பதிலுக்கு அவரது காதலி இன்னொசன்டாக பதிலளிக்கும்வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது.

க்யூட்டான வீடியோ

க்யூட்டான வீடியோ

இந்த வீடியோ அவ்வளவு க்யூட்டாக அமைந்துள்ளது. குறிப்பாக புகழுக்கே போட்டியாக வந்துவிடுவார் போல பென்சியா. அவரது பர்பார்மென்ஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் சில மணிநேரங்களில் மூன்றரை லட்சங்களுக்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் அள்ளியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X