Actor Pugazh: தினமும் 50 பேருக்கு.. பாலா வழியில் உதவிகளை முன்னெடுக்கும் புகழ்!
சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகள்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் புகழ். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து இவர் இணைந்து அடுத்தடுத்த சீசன்களை சிறப்பாக்கியுள்ளார். தற்போது 5வது சீசனிலும் இவர் இணைந்துள்ளார். இவருடன் ராமர், சுனிதா, குரேஷி இணைந்திருந்த ப்ரமோ வீடியோ வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இதில் மற்றவர்கள் விமானத்தில் வந்த நிலையில், புகழ் சைக்கிளில் வருவது போல காணப்பட்டது.
இந்த நிகழ்ச்சி அவருக்கு ஏராளமான படங்களில் நடிக்கும் வாய்ப்புகளையும பெற்றத் தந்துள்ளது. அயோத்தி, ஏஜெண்ட் கண்ணாயிரம் ஆகிய படங்கள் இவருக்கு சிறப்பான கவனத்தை பெற்றுத் தந்தது. தொடர்ந்து தற்போது MR Zoo Keeper என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். படம் அடுத்த மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

நடிகர் புகழ்: நடிகர் புகழ் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் சீசனிலிருந்து கோமாளியாக பங்கேற்று இதுவரை 4 சீசன்களை முடித்துள்ளார். இதில் சிவாங்கி, பாலா உள்ளிட்டவர்களுடன் இணைந்து அவர் செய்த லூட்டி ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. இரண்டாவது சீசனில் புகழை அதிகமான எபிசோட்களில் பார்க்க முடியவில்லை. அப்போது அதிகமான படங்களில் அவர் நடித்துவந்ததால் இடையில் அவர் காணாமல் போனதாக கூறப்பட்டது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி: இந்நிலையில் விரைவில் துவங்கவுள்ள குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியிலும் புகழ் கோமாளியாகவே இணையவுள்ளார். இதற்கான ப்ரமோ கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், குரேஷி, சுனிதா உள்ளிட்டவர்கள் கோமாளிகளாக இருந்தபோதிலும் விமானத்தில் இருந்து இறங்குகின்றனர். இதேபோல நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் ரக்ஷன், மணிமேகலை ஆகியோரும் விமானத்தில் இருந்து இறங்கிய நிலையில், சைக்கிளில் வரும் புகழ், அங்கே பார்க்கும் ராமரையும் தன்னுடைய புலம்பலில் சேர்த்து கொள்கிறார்.
முன்னணி நடிகர்களுடன் புகழ்: இந்த நிகழ்ச்சிகள் புகழுக்கு ஏராளமான பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளன. தமிழில் சசிக்குமார் இயக்கத்தில் அயோத்தி, சந்தானம் நடிப்பில் ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ள புகழ், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அவர் ஹீரோவாக நடித்துள்ள Mr Zoo Keeper படத்தின் சூட்டிங் நிறைவடைந்து, வரும் மே மாதத்தில் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பட,த்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
ஏழைகளுக்கு உதவும் புகழ்: இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற புகழிடம் பாலாவை தொடர்ந்து அவரும் ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த புகழ், தான் 10 ரூபாய் சம்பாதித்தால் அதில் 1 ரூபாயாவது செலவழிக்க தான் விரும்புவதாகவும் இதனால் தான் குறைந்துவிட மாட்டேன் என்றும் கூறியுள்ளார். சமீபத்தில் விஜயகாந்த் மறைவிற்காக சென்றபோது, தினசரி ஏழை எளியவர்களுக்கு உணவளிக்க உள்ளதாக தான் கூறியதை நினைவுகூர்ந்த புகழ், அதை தற்போது செயல்படுத்தி வருவதாகவும் தினசரி 50 ஏழைகளுக்கு உணவளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். கடந்த 100 நாட்களாக இதை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











