Pugazh: நிஜ புலியுடன் நடித்த அனுபவம்.. Mr. Zoo Keeper போஸ்டரை வெளியிட்ட புகழ்!

சென்னை: விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு மற்றும் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் புகழ்.

இந்த நிகழ்ச்சிகளின்மூலம் தமிழில் காமெடி நடிகராக முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் புகழ் பெற்றார். ஆனாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும் இவர் விட்டுவிடவில்லை.

Actor Pugazh released his Mr Zoo Keeper movie poster and shared in Instagram

தற்போது குக் வித் கோமாளியின் 4வது சீசனிலும் கோமாளியாக புகழ் கலக்கி வருகிறார். இவரது பர்பார்மென்ஸ் வழக்கம் போல ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது.

நிஜ புலியுடன் நடித்த அனுபவம் குறித்து புகழ் இன்ஸ்டாகிராம் பதிவு: நடிகர் புகழ், விஜய் டிவியின்மூலம்தான் சிறப்பான கவனத்தை பெற்றார். சேனலின் கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள்மூலம் இவர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். தொடர்ந்து தனக்கு ஏற்றத்தை கொடுத்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். தற்போது இந்த நிகழ்ச்சியின் 4வது சீசனிலும் பங்கேற்று சக போட்டியாளர்கள், நடுவர்கள் மட்டுமின்றி ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறார்.

இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்ற போதே இவருக்கு ஏராளமான சினிமா வாய்ப்புகள் கிடைத்தன. வலிமை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் காமெடி கேரக்டர்களிலும் ஹீரோவின் நண்பனாகவும் புகழ் நடித்திருந்தார். டைமிங் காமெடி மற்றும் பாடி லாங்குவேஜ் இவரது சிறப்பாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து படங்களில் கமிட்டாகி நடித்துவந்த புகழ், தற்போது நாயகனாகவும் மாறியுள்ளார்.

காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிப்பது இயல்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அவர்களுக்குள் இருக்கும் காமெடி மட்டுமில்லாமல் அவர்களின் நடிப்புத் திறமைக்கும் தீனி போடும் கேரக்டர்களை அவர்கள் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர்கள் விவேக், வடிவேலு, சந்தானம் போன்றவர்களை கூறலாம். நடிகர் சூரியும் காமெடியில் கலக்கிவந்த நிலையில், சமீபத்தில் வெளியான விடுதலை படத்தின்மூலம் தன்னுடைய ஹீரோயிசத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், நடிகர் புகழ், நடிக்கத் துவங்கிய சில காலத்திலேயே தற்போது ஹீரோவாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த விஷயத்தை முதன்முதலில் அவர் தன்னுடைய பேவரைட் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்தான் அறிவித்திருந்தார். இந்நிலையில் Mr. Zoo Keeper என்ற இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருவது, படத்திற்கான பெஸ்ட் விஷயமாக பார்க்கப்படுகிறது. படத்தில் டிக்கிலோனா படத்தின் நாயகி ஷிரின் கஞ்சாவாலா புகழுக்கு ஜோடியாகியுள்ளார்.

Actor Pugazh released his Mr Zoo Keeper movie poster and shared in Instagram

ஊட்டி, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்துள்ளது. மாதவன், சினேகா நடிப்பில் வெளியான என்னவளே படத்தை இயக்கிய சுரேஷ், இந்தப் படத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த படத்தின் குழுவினர் பங்கேற்றனர். படத்தின் ஹீரோவான புகழும் அவர்களுடன் இணைந்து, மீண்டும கோமாளியாக வழக்கம்போல தன்னுடைய பணியை தொடர்ந்தார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் போஸ்டரை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகழ், தன்னுடைய கனவை இந்தப் படம் நனவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்முறையாக திரையில் நாயகனாக நடித்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள புகழ், நிஜப் புலியுடன் தான் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது என்று கூறியுள்ளார். இந்தப் படத்தின் வாய்ப்பை அளித்த இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைத்த யுவன் மற்றும் தொடர்ந்து ஆதரவளித்துவரும் ரசிகர்களுக்கும் அவர் இந்தப் பதிவில் நன்றி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X