புகழின் மகள் புதிய ரெக்கார்ட்.. 11 மாதத்தில் இவ்வளவு திறமையா? ஆச்சரியத்தில் ஃபேன்ஸ்!
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் பல பிரபல நிகழ்ச்சிகளில் கலக்கி, தனக்கென தனித்த அடையாளத்தை உருவாக்கியவர் நடிகர் புகழ். கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ஆனால், அவருக்கு மிகப்பெரிய புகழையும், மக்களின் அன்பையும் தந்த நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி' தான். அந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் புகழ், அனைவரின் வீட்டின் செல்லப்பிள்ளையாக மாறி, ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றார்.
தொலைக்காட்சி வழியாக பிரபலமான நடிகர், புகழ் பின்னர் சினிமாவிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி சிக்ஸர், கைதி, வலிமை, யானை, சபாபதி, காக்டெயில் போன்ற பல படங்களில் நடித்தார். அண்மையில் அவர் Mr. Zoo Keeper என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

நடிகர் புகழ்: 2022ஆம் ஆண்டு புகழ் தனது நீண்ட நாள் காதலியான பென்ஸி ரியாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2023 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அன்பான மகளுக்கு ரிதன்யா என பெயர் வைத்துள்ளனர். சமீபத்தில் ரிதன்யாவின் முதல் பிறந்தநாளை மிகப்பெரிய அளவில் கொண்டாடினார். இந்த பிறந்த நாளில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டனர்.
3வது உலக சாதனை: சிறுவயதிலேயே தன்னுடைய திறமையால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வரும் ரிதன்யா. கடந்த ஆண்டு, வெறும் சில மாதங்கள் வயதிலேயே 2 கிலோ டம்பிள் 11 விநாடிகள் தொடர்ந்து தூக்கிய சிறுமி என்ற வகையில் உலக சாதனை படைத்திருந்தார். இப்போது, மேலும் ஒரு சாதனையை படைத்து தன்னுடைய பெயரை International Book of Records-ல் பொறித்துள்ளார் ரிதன்யா. பிறந்த 11 மாதம் 14 நாட்களிலேயே 45 படிகளை இடைவிடாமல் ஏறிய சிறுமி என்ற சாதனையை உருவாக்கி, உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளார். தந்தையின் நகைச்சுவை திறமையையும், தாயின் உறுதியையும் கலந்த இந்த சிறுமி, சிறுவயதிலேயே அசாத்திய சாதனைகளை படைத்து வருகிறார். ரிதன்யாவுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்துகளை மழையாய் தெரிவித்துக்கொண்டு, "இவள் தந்தையைவிட பெரிய ஸ்டார் ஆவாள்!" என்று பெருமையாகக் கூறி பலரும் இணையத்தில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











