புலியுடன் மல்லுக்கட்ட தயாராகும் புகழ்... ஹீரோவாக நடிக்கும் புதிய பட போஸ்டர் வெளியானது!
சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளவர் நடிகர் புகழ். இவருக்கு இந்த நிகழ்ச்சி சிறப்பான ஏற்றத்தை கொடுத்துள்ள நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அனைவரையும் கவர்ந்தும் வருகிறார்.
Recommended Video

நடிகர் புகழ்
நடிகர் புகழ் விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 2 மூலம் மிகப்பெரிய புகழை எட்டியுள்ளார். இவரது சேட்டைகள் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படங்களில் இவர் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ்
தொடர்ந்து காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மிகவும் பிசியாக இருந்தாலும் தன்னை ஏற்றிவிட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இவரை பார்க்க முடிகிறது. தற்போது விஜய் டிவியில் நடைபெற்று வரும் மூன்றாவது சீசனில் அவ்வப்போது பார்க்க முடிகிறது.

ஹீரோவாக புகழ்
இந்நிலையில் தற்போது இவர் ஹீரோவாக புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். MR Zoo Keeper என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் இன்று முதல் துவங்கவுள்ளதாக புகழ் தெரிவித்துள்ளார். மேலும் படத்திற்கென நிஜமான புலியுடன் தான் 10 நாட்கள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசை
இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து கூட்டணி வைத்துவரும் யுவன், காமெடி ஹீரோக்களுடனும் இணைந்து செயலாற்றி வருவது சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் புகழின் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

போஸ்டர் வெளியீடு
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரது இந்தப் போஸ்டரை நிகழ்ச்சியில் வெளியிட்ட குழுவினர், தொடர்ந்து அவரை கொண்டாடினர். மேலும் அவர் மற்றும் இந்த போஸ்டருடன் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர். இதையடுத்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இன்று முதல் ஷுட்டிங்
இந்தப் படத்தை ஜே சுரேஷ் என்பவர் இயக்கவுள்ள நிலையில் புகழுக்கு ஜோடியாகியுள்ளார் ஷெரின் காஞ்ச்வாலா. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகழ், அனைவரது சப்போர்ட்டும் இந்தப் படத்திற்கு தேவை என்று குறிப்பிட்டுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மட்டுமின்றி தற்போது திரைப்படங்களிலும் சிறப்பாக நடித்துவரும் புகழ் இந்தப் படத்தின் மூலம் அடுத்தக்கட்டத்திற்கு போவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











