Mr Zoo keeper: அன்பு காட்டினா புலிகூட பசுதான்.. வெளியானது Mr Zoo keeper படத்தின் டீசர்!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் புகழ். இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கியுடன் இவர் செய்த லூட்டிகள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தன. இந்த நிகழ்ச்சியின்மூலம் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் குவிந்து வருகின்றன. சந்தானம், அருண் விஜய், சூர்யா, அஜித் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்துள்ள புகழ், தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். Mr Zoo keeper என்ற படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார் புகழ். இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் காமெடி ஷோக்களில் பங்கேற்பதற்கு முன்னதாக வாய்ப்புகளை பெறுவதற்காக மிகவும் சிரமப்பட்ட புகழ், கிடைத்த வேலைகளை எல்லாம் செய்ததாகவும், கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டதாகவும் முன்னதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக ஏராளமான ரசிகர்களை பெற்ற புகழ், அதன்மூலம் சினிமாவில் காமெடியனாக நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார். இந்நிலையில் தற்போது ஹீரேவாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது Zoo keeper படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி இன்றைய தினம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Actor Pugazhs Mr Zoo Keeper movie teaser released by Actor Vijay Sethupathi

நடிகர் புகழ்: நடிகர் புகழ் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிமூலம் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தியவர். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக ஷிவாங்கியுடன் இணைந்து புகழ் செய்த பல கோமாளித்தனங்கள் ரசிகர்களுக்கு சிறப்பான என்டர்டெயின்மெண்டை கொடுத்தன. ஷிவாங்கி கடந்த சீசனில் குக்காக மாறியபோது, அண்ணே, தங்கச்சிம்மா என்று இவர்களது அலப்பறைகள் குறையாமல் பார்த்துக் கொண்டனர். கடந்த சீசனிலும் இவர்களின் லூட்டிகள் தொடர்ந்தன. நிகழ்ச்சிக்கும் சிறப்பாக அமைந்தன. இந்த நிகழ்ச்சிமூலம் புகழ், சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்புகளை தொடர்ந்து பெற்று வருகிறார்.

Mr Zoo Keeper படம்: வாய்ப்புகளுக்காக போராடிய காலம்போய், தற்போது புகழுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் Mr Zoo keeper படம் மூலம் புகழ் ஹீரோவாகவும் உயர்ந்துள்ளார். முன்னதாக சந்தானத்துடன் சபாபதி, சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், அஜித்துடன் வலிமை, அருண் விஜய்யுடன் யானை போன்ற படங்களில் காமெடியனாக நடித்துள்ள புகழ், Mr Zoo Keeper படத்தின் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதை தற்போது வெளியாகியுள்ள படத்தின் டீசரில் பார்க்க முடிகிறது. இன்றைய தினம் நடிகர் விஜய் சேதுபதி சமூகவலைதளத்தில் இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி: புகழ் உள்ளிட்ட படக்குழுவினருக்கும் விஜய் சேதுபதி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் Mr Zoo keeperஆக புகழ் நடித்துள்ள நிலையில், காணாமல் போகும் புலிக்குட்டியை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. புகழுக்கு இந்தப் படத்தில் நடிப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் காணப்படுகின்றன. அதை அவர் சிறப்பாக பயன்படுத்தியுள்ளதும் தற்போது வெளியாகியுள்ள டீசரில் தெரியவந்துள்ளது. இதில் அன்பு காட்டினால் புலிகூட பசுதான் என்பது போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளன. ஜே4 ஸ்டூடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில், படம் மிகப்பெரிய பாராட்டுக்களை புகழுக்கு பெற்றுத் தரும் என்று நம்பலாம்.

மன்னிப்பு கேட்ட புகழ்: கடந்த சில தினங்களுக்கு முன்பு துபாயில் நடந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலம் குரேஷியுடன் இணைந்து கமல் -மாயா குறித்து கலாய்த்திருந்தார் புகழ். கமலுக்கு பிடித்த இடம் மாயாஜால், பிடித்தபடம் மாயாபஜார் என்பதாக அவர்களது பேச்சு இருந்தது. இந்த இதனால் கமல் ரசிகர்கள் புகழ் மற்றும் குரேஷி மீது கடுப்பாகி, சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவு செய்தனர். இதையடுத்து இருவரும் தனித்தனியாக வீடியோ மூலம் மன்னிப்பு கேட்டுள்ளனர். தங்களது நிகழ்ச்சி ரசிகர்களை வருத்தப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக இருவரும் குறிப்பிட்டிருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X