நயன்தாரா கொள்கை பரப்பு செயலாளரா.. என்ன உறவு? மீண்டும் ஆபாசமாக பேசிய ராதாரவி.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி ஆபாசமாக பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக சட்டசபைக்கு வரும் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு கட்சியினரும் தங்களுக்கு எப்படியெல்லாம் வாக்கு சேகரிக்க முடியுமோ அப்படியல்லாம் சேகரித்து வருகின்றனர்.

பூரி சுடுவது
தோசை சுடுவது, பூரி சுடுவது, மாலை கட்டுவது, காலில் விழுவது, பொன்னாடை போர்த்துவது, நடனமாடுவது என என்னவெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் வாக்கு சேகரித்து வருகின்றனர். சில நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் எல்லைத்தாண்டி பேசி வருகின்றனர்.

மன்னிப்பு.. வருத்தம்..
எல்லை மீறி தரக்குறைவாக பேசுவதும் பின்னர் மன்னிப்பு கேட்பதும் வருத்தம் தெரிவிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் பாஜக பிரமுகரும் நடிகருமான ராதாரவி பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா உதயநிதி
தங்கள் வேட்பாளரை ஆதரித்து பேசிய ராதாரவி எதிர்க்கட்சியை விமர்சித்தார். அப்போது திமுக குறித்து பேசிய நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவையும் உதயநிதி ஸ்டாலினையும் இணைத்து ஆபாசமாக பேசினார். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
என்ன உறவு?
அதில் அவர் பேசியிருப்பதாவது, நடிகை நயன்தாரா என்ன அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரா? அவருக்கும் உதயநிதிக்கும் என்ன உறவு? நான் திமுகவில் இருந்த போது ஒரு நிகழ்ச்சியில் நயன்தாரா பற்றி நான் பேசவேயில்லை. ஆனால் பத்திரிக்கைகளில் நான் பேசியதாக போட்டு மாட்டிவிட்டாங்க.

குதிச்சீங்களே..
உடனே ராதாரவி பெண்களை அவதூறாக பேசிவிட்டார் என்று தற்காலிகமாக நீக்கினார்கள். நான் நிரந்தரமாகவே போகிறேன் என்று வெளியே வந்து விட்டேன். அப்போது அப்படி குதிச்சீங்களே.. இப்போது ஆ ராசா பேசியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என இவ்வாறு ராதாரவி தனது பிரசாரத்தின் போது பேசியுள்ளார்.

கொலையுதிர் காலம்
ராதாரவியின் இந்த வீடியோவை பார்த்த பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2019ஆம் ஆண்டு ராதாரவி திமுகவில் இருந்த போது, கொலையுதிர் காலம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

வராத செய்தியே இல்லை
அப்போது பேசிய ராதாரவி, நயன்தாரா ஒரு சிறந்த நடிகை. ஆனால் அவரை நடிகையர் திலகம், புரட்சி தலைவி என்று அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை பற்றி வராத செய்தியே இல்லை. ஆனாலும் அவர் சினிமாவில் இருக்கிறார்.

புனிதமான கதாப்பாத்திரம்
தமிழ்நாட்டு மக்கள் எல்லாவற்றையும் 4 நாளுக்கு தான் ஞாபகம் வைத்திருப்பார்கள். நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார். அதே சமயம் சீதையாகவும் நடிக்கிறார். முன்பெல்லாம் புனிதமான கதராபாத்திரத்தில் நடிப்பதற்கு, கே.ஆர். விஜயா போன்ற நடிகைகளைத் தான் தேடுவார்கள்.

பார்த்தவுடனே கூப்பிடுறவங்களும்
ஆனால் இப்போது யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். பார்த்தவுடனே கும்பிடறவங்களும் நடிக்கிறார்கள், பார்த்த உடனே கூப்பிடுறவங்களும் நடிக்கிறார்கள் என்று ஆபாசமாக பேசினார். இதனை தொடர்ந்து அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











