Radha Ravi: டப்பிங் யூனியன் தேர்தலில் வாக்களிக்க கைத்தடியுடன் வந்த ராதாரவி.. நடக்க முடியாமல் சிரமம்!
சென்னை: நடிகர் ராதாரவி 71 வயது ஆன நிலையிலும் சுறுசுறுப்பாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். டப்பிங் யூனியன் சங்க தலைவராக இருந்து வரும் ராதாரவி இன்றைய தினம் அந்த சங்கத்திற்கான தேர்தலில் வாக்களிக்க கைத்தடியுடன் வந்திருந்தார். இந்த முறையும் அவர் தலைவர் பதவிக்கே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து துணை தலைவராக இருந்த ராஜேந்திரன் போட்டியிடுகிறார். இதனிடையே ராஜேந்திரன் தனக்கு 40 ஆண்டுகால நண்பர் என்றும் சினிமாவில் எதிரிகளை பார்த்துள்ளதாகவும் துரோகிகளையும் பார்த்து வருவதாகவும் முன்னதாக பேட்டியொன்றில் ராதாரவி பேசியிருந்தார்.
அவருக்கு காலில் அடிபட்ட நிலையில் நடக்க முடியாமல் நடந்துவந்து வாக்களித்தது பார்ப்பவர்களை வருத்தப்பட செய்தது. அவருடன் எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் உதவியாக வந்திருந்தனர். முன்னதாக இந்தத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்யும் போதும் கைத்தடியுடனேயே அவர் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசி சிக்கல்களில் மாட்டி வரும் ராதாரவி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நயன்தாரா, சின்மயி உள்ளிட்டவர்கள் குறித்து சர்ச்சை பேச்சுகளை பேசி அதிகமான விமர்சனங்களை பெற்றிருந்தார். கடந்த ஆண்டில் டப்பிங் ஆர்டிஸ்ட் பெண்ணை ஆபாசமாக பேசியதாக ராதாரவி மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

தலைவர் பதவிக்கு போட்டி: கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சங்க தேர்தல் குறித்து பேசிய ராதாரவி டப்பிங் கலைஞர் சங்கத்திற்கான தேர்தலில் தான் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாகவும் மொத்தம் 1645 வாக்குகள் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். தன்னுடைய கேரியரில் எதிரிகளை பார்த்துள்ளதாகவும் ஆனால் துரோகிகளை இந்த தேர்தலில் தான் பார்ப்பதாகவும். அவர் தெரிவித்து இருந்தார். தான் தன்னம்பிக்கையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். புதிய முகங்களையும் இந்த தேர்தலில் நிறுத்துவதாகவும் ஆர்வம் இருப்பவர்களை சேர்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
கைத்தடியுடன் வந்த ராதாரவி: தன்னை எதிர்த்து போட்டியிடும் ராஜேந்திரன் 40 ஆண்டு காலமாக தனக்கு நல்ல நண்பனாக இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். ராதாரவிக்கு காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலையில் இருந்த போதிலும் கஷ்டப்பட்டு நடந்துவந்து தனது வேட்பு மனுவை அவர் தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்று வரும் தேர்தலில் வாக்களிக்க அவர் கைத்தடியை தாங்கிப் பிடித்தவாறு நடக்க முடியாமல் நடந்து வந்தார். அவருடன் எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டவர்கள் துணையாக அவரை வைத்தாங்கலாக பிடித்தவாறு வந்தனர்.
ராதாரவியின் பேச்சு: 71 வயதான போதிலும் நடிகர் ராதாரவி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். மேலும் டப்பிங் யூனியன் சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சுகளை பேசி அதிலும் சிக்கி வருகிறார். நயன்தாரா, சின்மயி போன்றவர்கள் குறித்த ராதாரவியின் பேச்சு கண்டனங்களை ஏற்படுத்தியிருந்தது, இதற்கு விளக்கங்களையும் மன்னைப்பையும் அவர் கேட்டிருந்தார். இந்நிலையில் காலில் அடிபட்ட போதிலும் அவர் டப்பிங் யூனியன் சங்க தேர்தலில் வாக்களிக்க வந்தது அனைவரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.


Click it and Unblock the Notifications











