தர்ஷா குப்தா, கெளதம் மேனனை தொடர்ந்து.. திரெளபதி இயக்குநர் படத்தில் இணைந்த அடுத்த பிரபலம்!

சென்னை: திரெளபதி இயக்குநர் மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் ருத்ர தாண்டவம் படத்தில் நடிகர் டத்தோ ராதாரவி இணைந்துள்ளார்.

இயக்குநர் மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரெளபதி திரைப்படம் ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை ஷாலினியின் சகோதரரும் நடிகருமான ரிச்சர்ட் ரிஷி, ஷீலா ராஜ்குமார் மற்றும் கருணாஸ் உள்ளிட்டோர் அந்த படத்தில் நடித்திருந்தனர்.

18 நாட்கள் மட்டுமே

18 நாட்கள் மட்டுமே

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான திரெளபதி திரைப்படம் வெறும் 18 நாட்கள் மட்டுமே திரையரங்குகளில் ஓடியது. நாடக காதல் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த படம் கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் கடந்த ஆண்டு மூடப்பட்டதன் எதிரொலியாக நிறுத்தப்பட்டது. பின்னர் விஜய் டிவியில் சிறப்புத் திரைப்படமாக ஒளிபரப்பப்பட்டது.

ருத்ர தாண்டவம்

ருத்ர தாண்டவம்

இரண்டாவது படத்தை சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போல பண்ண போகிறேன் எனக் கூறிய இயக்குநர் மோகன். ஜி மீண்டும் நடிகர் ரிச்சர்ட் ரிஷியை ஹீரோவாக்கி ருத்ர தாண்டவம் எனும் பெயரில் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். மேலும், அந்த படத்தில் முன்னணி நடிகர்கள் பலரை களமிறக்கி வருகிறார்.

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா

டிவி சீரியல்களில் நடித்து வந்த தர்ஷா குப்தாவுக்கு குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே சமூக வலைதளங்களில் படுகவர்ச்சியான போட்டோக்களை போட்டு ஏகப்பட்ட இளைஞர்களை கவர்ந்து வந்த தர்ஷா குப்தா, குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறியதே ருத்ர தாண்டவம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் தான் என்கின்றனர்.

கெளதம் மேனன்

கெளதம் மேனன்

ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா இணைந்து நடித்து வந்த நிலையில், சமீபத்தில் ருத்ர தாண்டவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் கெளதம் மேனனை களமிறக்கினார் இயக்குநர் மோகன். டிரான்ஸ், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், குட்டி ஸ்டோரி, பாவக் கதைகள் என சமீபத்தில் ஏகப்பட்ட படங்களில் நடிப்பால் மிரட்டிய கெளதம் மேனன் இந்த படத்திற்கு இணைந்திருப்பது கூடுதல் பலம்.

’டத்தோ’ ராதாரவி

’டத்தோ’ ராதாரவி

இயக்குநர் கெளதம் மேனனை தொடர்ந்து தற்போது மற்றுமொரு பிரபல நடிகரும் ருத்ர தாண்டவம் படத்தில் இணைந்துள்ளார். சமீபத்தில் வெளியான ஜீவாவின் களத்தில் சந்திப்போம் படத்தில் நடித்த நடிகர் 'டத்தோ' ரவி ருத்ர தாண்டவம் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக இயக்குநர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இன்னும் சர்ப்ரைஸ்

இன்னும் சர்ப்ரைஸ்

இது மட்டும் தானா? இன்னும் வேறு ஏதாவது சர்ப்ரைஸ் இருக்கா என ஏகப்பட்ட ரசிகர்கள் இயக்குநர் மோகனிடம் கேட்டு வருகின்றனர். ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக அதிரடி கலந்த ஆக்‌ஷன் திரைப்படமாக விரைவில் ருத்ர தாண்டவம் வெளியாகும். வேற சர்ப்ரைஸ் இணைப்புகள் ஏற்பட்டால் உங்களுக்கு நிச்சயம் அறிவிப்பேன் என்றும் பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X