சந்தா கட்டாத விஜய், ஸ்ருதிஹாசன் மீது ஏன் ஆக்சன் எடுக்கவில்லை? சின்மயிக்கு மட்டும்! ராதாரவி விளக்கம்
சென்னை: டப்பிங் யூனியன் தொடர்பாக சின்மயி கொடுத்த குற்றச்சாட்டிற்கு நடிகர் ராதாரவி கொடுத்து இருக்கும் விளக்கம் தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு சின்மயி டப்பிங் யூனியனுக்கு சந்தா கட்டவில்லை என்ற காரணத்தை சொல்லி அவரை யூனியனிலிருந்து நீக்கி இருக்கிறார்கள். ஆனால் இதே போல நடிகர் விஜய், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட சிலர் சந்தா கட்டாமல் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் மட்டும் டப்பிங் யூனியனின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்று சின்மயி கூறி இருந்தார்.
அதற்கு நடிகராகவும் டப்பிங் யூனியன் தலைவராகவும் இருக்கும் ராதாரவி விளக்கம் கொடுத்திருக்கிறார். இது குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் சினிமா பிரபல பாடகியாக பலருக்கும் பரீட்சையமான சின்மயி ஏ.ஆர் ரகுமான் இசையில் கன்னத்தில் முத்தமிட்டாள் என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தார். அதை தொடர்ந்து இவர் பல படங்களில் பல சூப்பர் டூப்பர் பாடல்கள் பாடி இருக்கிறார். சின்மயி பாடிய பல பாடல்கள் வெற்றி அடைந்திருந்த நிலையில் இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இப்படியான நிலையில் தான் சில வருடங்களுக்கு முன்பு வைரமுத்து மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டு தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் மீ டு பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இதனால் சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே பெரிய அளவில் போர் வெடித்தது. இந்த பிரச்சனையை தொடர்ந்து சின்மயி டப்பிங் யூனியனிலிருந்து நீக்கி இருக்கிறார்கள்.
இதனால் சின்மயி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் படங்களுக்கு டப்பிங் பேச முடியாமல் இருக்கிறார். ஆனால் தன்னை டப்பிங் யூனியனிலிருந்து விலக்கியது ராதாரவி தான் என்று சின்மயி குற்றம் சாட்டியிருக்கிறார் அது மட்டுமல்லாமல் விஜய், ஸ்ருதிஹாசன் போன்ற நடிகர்களும் சந்தா கட்டவில்லை. இருந்தாலும் அவர்கள் டப்பிங் யூனியனில் உறுப்பினராக இருக்கிறார்கள்.
அவர்கள் மீது மட்டும் ஏன் ஆக்சன் எடுக்கவில்லை என்று சின்மயி கேள்வி எழுப்பி இருந்தார். இது குறித்து டப்பிங் யூனியனில் இருந்த ஒரு சிலரும் சின்மயிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். அதுபோல ஒரு சிலர் சின்மயிக்கு எதிராகவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்படியான நிலையில் டப்பிங் யூனியனின் தலைவராக இருக்கும் ராதாரவி இது பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் டப்பிங் யூனியனில் மஞ்சள் நிற அட்டை வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய சந்தாவை புதுப்பிக்க வேண்டும். சின்மயியும் அந்த கார்டை தான் வைத்திருந்தார். ஆனால் அவர் புதுப்பிக்கவில்லை. அதனால் அவரை டப்பிங் யூனியனில் இருந்து நீக்கிவிட்டோம். அது மட்டுமில்லாமல் மஞ்சள் நிற அட்டை வைத்து இருந்த அவர் வெள்ளை நிற அட்டை வைத்திருப்பதாக பொய் சொல்லி இருந்தார்.
அதுபோல விஜய், ஸ்ருதிஹாசன் ஆகியோர் டப்பிங் யூனியனில் சந்தா கட்டாமல் இருந்தார்கள். பிறகு ஹரால்டு ராமசாமி என்பவர் மாதா மாதம் 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து அவர்களுக்கு சந்தா கட்ட எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதிலிருந்து நாங்கள் விஜய் ஸ்ருதிஹாசன் உடைய சந்தா காசு எடுத்துக் கொள்வோம். அதுபோல சின்மயியும் மீண்டும் டப்பிங் யூனியனுக்கு வந்தால் நிச்சயமாக அந்த காம்பவுண்டுக்குள் கூட நாங்கள் சேர்க்க மாட்டோம்.
சின்மயிக்கு இந்த டப்பிங் யூனியனில் வர தகுதியே இல்லை என்று பேசி இருக்கிறார். அதுபோல டப்பிங் யூனியனுக்கு நீண்ட காலமாக ராதாரவி தலைவராக இருக்கிறார். இந்த நிலையில் இந்த மாதம் 17ஆம் தேதி டப்பிங் யூனியனுக்கு தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் டப்பிங் யூனியன் பொறுப்புகளில் இருக்கும் ராதா ரவியும், சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவருமான ராஜேந்திரனும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் இருவரும் காரசாரமாக பேசி வருகிறார்கள். இந்த நிலையில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











