twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஷால்.. நாசர்.. கறைபடியாத கை.. கார்த்தி ஒரு அப்பாவி.. ராதாரவி கிண்டல் !

    |

    சென்னை : விஷால் மற்றும் நாசரும் கறைபடியா கரங்களுக்கு சொந்தக்காரர்கள் என மறைமுகமாக கிண்டலடித்தார் நடிகர் ராதாரவி.

    நடிகர் சங்க தேர்தல் பிரச்சினைகள் ஒருபுறம் இருக்க தற்போது டப்பிங் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சங்கத்தின் தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி போட்டியிடுகிறார். இதற்கு முன்பே அவர் டப்பிங் சங்கத்தின் தலைவராக இருந்தார். சில பிரச்சனைகள் காரணமாக அவர் வெளியேற்றப்பட்டார் மேலும் அந்த விசயத்திற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து 'ஸ்டேயும்' வாங்கியிருக்கிறார் .

     actor radha ravi press meet

    சினிமாவில் 48ற்கும் மேற்பட்ட துறைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் தலைவர்கள் சங்க நிர்வாகிகள் என அனைவரும் இருந்து வழிநடத்தி வருகின்றன. இதில் நடிகர் சங்கம் பற்றியும் அதன் பிரச்சனைகளை பற்றியும் பலருக்கும் தெரியும். தற்போது டப்பிங் சங்கத்தின் தலைவராக போட்டியிட போகும் நடிகர் ராதாரவி நடிகர் சங்கத்தை பற்றியும் அதன் முன்னாள் அதிகாரிகளை பற்றியும் தனது கருத்தை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.

    அதில் சமீபத்தில் நடந்து முடிந்த நடிகர் சங்கத்தேர்தலில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் நடிகர் விஷால் மீதும் குற்றம்சாட்டை வைத்தார். மேலும் நடிகர் சங்க தேர்தல் முழுமையாக முடிவதற்குள் விஷால் ஆயிரம் ஓட்டு விழுந்து விட்டது என கூறியது தான் முதல் பிரச்சினை அப்போதே விஷால் சொன்னது தவறு என்று நிரூபிக்கபட்டு விட்டது என்று கூறினார்.

    சமந்தாவுக்கு சமூக அக்கறை நிறையவே இருக்கு.. சூர்யாவை தொடர்ந்து கல்வி சேவையில் களமிறங்கிய சமந்தா!சமந்தாவுக்கு சமூக அக்கறை நிறையவே இருக்கு.. சூர்யாவை தொடர்ந்து கல்வி சேவையில் களமிறங்கிய சமந்தா!

    விஷால் மற்றும் நாசர் தான் கரைபடியா கரங்களுக்கு சொந்தக்காரர்கள் என மறைமுகமாக கிண்டலடித்தார். அந்த அணியில் அப்பாவி என்றால் அது நடிகர் கார்த்தி என்றும் கூறினார் .

     actor radha ravi press meet

    சில நாட்கள் முன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தனது சொந்த செலவில் நடிகர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதாக கூறியிருந்தார். அதனை பற்றி கருத்தை கூறிய ராதாரவி, ஐசரிகணேஷ்க்கு வசதி இருக்கிறது அவர் வசதிக்கு அவர் செய்கிறார் என்று கூறினார் .

    இறுதியாக பேசிய அவர், டப்பிங் சங்கம் போல இல்லை நடிகர் சங்கம். டப்பிங் சங்க தேர்தல் வைத்தால் மொத்த கலைஞர்களும் கோடம்பாக்கத்துக்குள் தான் இருப்பார்கள் அது எளிதாக முடிந்துவிடும் என்று கூறினார். ஆனால் நடிகர் சங்கம் அப்படி இல்லை நடிகர்கள் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கில் இருக்கிறார்கள் அவர்களை ஒன்று திரட்டி வாக்கெடுப்பு நடத்துவது மிகவும் கடினமான வேலை என்று கருத்து தெரிவித்து இருந்தார் .

    English summary
    actor radha ravi press meet
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X