எல்லாத்துலேயும் பொய்.. நிர்வாகத்திலேயும் பொய்.. விஷாலை சரமாரியாக விளாசிய ராதா ரவி

சென்னை : விஷால் தலைமையிலான நிர்வாகத்தில் எல்லாமே பொய் என நடிகர் ராதா ரவி சரமாரியாக விளாசியுள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் வரும் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற இருந்தது. நடிகர் சங்க தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், இயக்குநர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன.

நடிகர் சங்க தேர்தலில் அதிக குளறுபடிகள் உள்ளதாக கூறி தேர்தலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இது நடிகர் சங்கத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Actor Radha ravi slams Actor Vishal

இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய நடிகர் ராதாரவி, விஷால் தலைமையிலான நிர்வாகத்தில் எல்லாமே பொய் என சாடினார். மேலும் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் நடிகர் ராதா ரவி கூறினார்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதா ரவி கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அதிமுகவில் மீண்டும் இணைந்தார். நடிகை நயன்தாராவை தரக்குறைவாக விமர்சித்த காரணத்தால் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் ராதா ரவி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X