விஜய்யின் அரசியல் பிரவேசம்.. கையெடுத்து கும்பிட்ட நடிகர் ராதாரவி.. கருத்து சொல்ல மறுப்பு!
சென்னை: நடிகர் விஜய் அடுத்தடுத்த தளங்களில் தன்னை இணைத்து வருகிறார். சினிமாவில் 40 ஆண்டுகளை கடந்து அவர் நடித்துவரும் நிலையில் அடுத்ததாக தவெக என்ற கட்சியை துவங்கியுள்ளார் விஜய். தன்னுடைய கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் அவரது அரசியல் பிரவேசம் அடுத்தடுத்த விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சிலவாரங்களுக்கு முன்பு தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்துள்ளார். அடுத்தடுத்து திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். சினிமாவில் இருந்து பலரும் அரசியலுக்கு வரும் நிலையில் அவரது அரசியல் பயணம் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் அடுத்தடுத்த படங்களில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வெற்றிப்படங்களை கொடுத்தவர். இவரது பீஸ்ட், கோட், லியோ படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சிறப்பாக அமைந்தன. தொடர்ந்து ரசிகர்களின் விருப்பத்தை உணர்ந்து தன்னுடைய படங்களின் கதைக்களத்தை கொடுத்துவரும் விஜய், தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஒரு படத்திற்கு இவரது சம்பளம் 200 கோடிகளை தாண்டியுள்ளதாக கூறப்படும் நிலையில், இவர் சினிமாவில் இருந்து விலகும் முடிவை எடுததுள்ளார். தவெக கட்சியை துவங்கியுள்ள விஜய், சினிமாவில் இருந்து விலகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
சினிமாவிலிருந்து விலகும் விஜய்: அவரது இந்த முடிவு தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள போதிலும் அவரின் அரசியல் என்ட்ரி சிறப்பாக பார்க்கப்படுகிறது. 2026ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சி போட்டியிடும் என்று விஜய் அறிவித்துள்ள நிலையில், அதற்கான அடுத்தடுத்த செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு விக்கிரவாண்டியில் இவரது கட்சியின் முதல் மாநாடு சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவரது அரசியல் பிரவேசம் அதிகமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
கையெடுத்து கும்பிட்ட ராதாரவி: இதனிடையே, நடிகர் ராதாரவியிடம் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ராதாரவி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவரிடம் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்விஎழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்காமல் கையெடுத்து கும்பிட்டார் ராதாரவி. தொடர்ந்து பணம் இருப்பவர்கள் அரசியல் கட்சி துவங்குவதாகவும் அதுகுறித்து தான் கருத்துக்கூற எதுவுமில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
கங்குவா குறித்தும் பேச்சு: அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பேசிவரும் ராதாரவியிடம் மற்றொரு நிகழ்ச்சியில் சூர்யாவின் கங்குவாபடம் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், படம் பாகுபலி போல இருக்கும் என்று படக்குழுவினர் கூறவில்லை என்று தெரிவித்துள்ளார். ரசிகர்கள் தாங்களாகவே அவ்வாறு கற்பனை செய்து கொண்டு படத்தை பார்க்க வருவது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு படக்குழுவினர் என்ன செய்வார்கள் என்றும் கேட்டுள்ளார். சினிமா என்பது ஏமாற்று வேலை என்றும் தெரிவித்துள்ள ராதாரவி நான் கத்தியால் குத்துவதைப் போல குத்துகிறேன் நீ அழுவதைப் போல அழவேண்டும் என்பதுதான் சினிமா என்றும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











