ராதாரவியின் நித்யானந்தா அவதாரம்.. போஸ்டர் வெளியானது !
சென்னை : தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் ராதாரவி தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.
திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் என பல கதைகளில் பல அவதாரங்களை ஏற்று நடித்த நடிகர் ராதாரவி தற்போது சர்ச்சைக்குரிய தலைப்பில் படமொன்றில் நடித்து வருகிறார்.
முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு நித்தியானந்தா என பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் புதுமுக இயக்குனர் மதிவாணன் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

பல அவதாரங்களில்
தமிழ்சினிமாவில் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத நடிகர்களில் மிக முக்கியமானவர் டத்தோ நடிகர் ராதாரவி. இயக்குனர் கே பாலச்சந்தரின் இயக்கத்தில் அறிமுகமான இவர் பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும் குணச்சித்திர நடிகராகவும் மற்றும் வில்லனாகவும் பல அவதாரங்களில் நடித்து அனைவரையும் மிரட்டி வந்துள்ளார்.

எண்ணற்ற படங்களில்
இவ்வாறு தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி அதை தனக்கே உரித்தான பாணியில் மிக அழகாக வெளிக்கொண்டு வரக்கூடியவர். தமிழ் மொழியில் எண்ணற்ற படங்களில் நடித்துள்ள ராதாரவி அதைத்தொடர்ந்து மலையாளம், கன்னடம், தெலுங்கு என அங்கும் ஒரு சில படங்களில் நடித்து அனைவருக்கும் பரிச்சயமானார்.

சொந்த தயாரிப்பில்
இவ்வாறு நடிகராக எண்ணற்ற கதாபாத்திரங்களில் எண்ணற்ற படங்களில் நடித்த இவர் 1991 ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கார்த்திக் மற்றும் குஷ்பூ இணைந்த நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான இது நம்ம பூமி திரைப்படத்தை முதன்முதலில் தனது சொந்த தயாரிப்பில் தயாரித்திருந்தார்.

பின்னணி குரல்
இந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து தை மாசம் பூ வாசம், இளைஞரணி, சின்ன முத்து போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். இதைத் தொடர்ந்து பல தமிழ் மொழிபெயர்ப்பு படங்களுக்கு இவர் பின்னணி தமிழ் குரல் கொடுத்தும் உள்ளார்.

முழுக்க புதுமுகங்கள்
இவ்வாறு நடிகர், தயாரிப்பாளர், பின்னணி குரல் என பல படங்களில் பல அவதாரங்களை எடுத்து வந்த ராதாரவி தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். முழுக்க முழுக்க புதுமுகங்கள் இணைந்துள்ள இந்த படத்தில் நடிகர் ராதாரவி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நித்யானந்தா
புதுமுக இயக்குனர் மதிவாணன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு "நித்யானந்தா" என பெயரிடப்பட்டுள்ளது. சமீப காலமாக உலக அளவில் பலராலும் உச்சரிக்கப்பட்டு வரும் இந்த பெயர் தற்பொழுது திரைப்படத்தின் தலைப்பாக வைத்துள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

கூலிங் கிளாஸ்
தலையில் தலைப்பாகையுடன் ஸ்டைலான கூலிங் கிளாஸ் அணிந்து நெற்றியில் பட்டையுடன் சிரித்த முகத்துடன் பார்க்கவே வித்தியாசமாக காட்சியளிக்கும் ராதாரவியின் புகைப்படம் அடங்கியுள்ள நித்தியானந்தா படத்தின் போஸ்டர் அனைவரையும் "தரமான சம்பவம் ஒன்று காத்திருக்கிறது" என சொல்லும்படி எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

முதல்பாடல் விரைவில்
மேலும் இந்த படத்தின் முதல் பாடல் "போங்கு ஆட்டம்" விரைவில் வெளியிடப்படும் என இந்த படத்தின் போஸ்டரை நடன இயக்குனரும் நடிகருமான சாண்டி, நடிகர் நடராஜ் உட்பட பல திரைப்பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களின் மூலம் வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











