திருப்பதி டூ சென்னை.. போலீஸிடம் அலப்பறை கூட்டிய பப்லு பிருத்விராஜ்.. இவ்வளவு சேட்டையா?
சென்னை: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் வில்லன், ஹீரோ என பிஸியான நடிகராக வலம் வந்தவர் பப்லு பிருத்விராஜ். பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கினார் அவர். இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவரை பற்றிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் பப்லு பிருத்விராஜ். அவரது தந்தையின் விடாமுயற்சியால் குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் வந்த அவர் நிறைய படங்களில் நடித்தார். அதனைத் தொடர்ந்து வில்லன், குணசித்திர வேடங்களையும் ஏற்ற அவர் தனது ஃபெர்பார்மன்ஸில் மெர்சல் செய்தார். பாண்டிநாட்டு தங்கம், சிகரம், அழகன் என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். முக்கியமாக 90களில் ஃபேமஸான நடிகராக வலம் வந்தார் அவர்.
அவள் வருவாளா: பிருத்விராஜ் ஏகப்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் ராஜ்கபூர் இயக்கி அஜித், சிம்ரன் லீட் ரோலில் நடித்த அவள் வருவாளா திரைப்படம் பப்லுவுக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. அப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்த அவர்; தனது நடிப்பில் ஒரு சைக்கோத்தனத்தை கொண்டு வந்து மிரட்டியிருந்தார். தொடர்ந்து நடித்த அவருக்கு திடீரென பட வாய்ப்புகள் குறைந்தன. எனவே சினிமாவிலிருந்து ஒதுங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டார். மேலும் சின்னத்திரையிலிருந்தும் முழுவதுமாக ஒதுங்கினார்.


சிம்புவுடன் சண்டை: சூழல் இப்படி இருக்க தனியார் சேனல் ஒன்று நடத்திய நடன போட்டியில் கலந்துகொண்டார். அதில் சிம்புவும் நடுவர்களில் ஒருவராக இருந்தார். அப்போது அந்த செட்டிலேயே பப்லுவுக்கும் சிம்புவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அது அந்த சமயத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம் அவர்கள் இரண்டு பேருக்கும் நடந்த சண்டை முழுக்க முழுக்க ஸ்க்ரிப்ட்தான் என்றும் பலர் சொல்வதுண்டு.
விவாகரத்து; லிவிங் டூ கெதர்: இதற்கிடையே அவர் பீனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பீனாவுக்கும் பப்லுவுக்கும் ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு ஆட்டிஸம் குறைபாடு இருக்கிறது. இருந்தாலும் இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பீனாவை பிரிந்த அவர் ஷீத்தல் என்பவருடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். தற்போது ஷீத்தலுடனான காதலையும் அவர் முறித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பப்லுவின் இரண்டாவது இன்னிங்ஸ்: அவர் இப்போது திரைத்துறையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். அதன்படி அனிமல் படத்தில் நடித்த அவர் அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்திலும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். அதேபோல் சிம்ரன் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இவை தவிர்த்து அவர் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகியிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் ஏஸ் திரைப்படம் வெளியானது.
பப்லு செய்த சேட்டை: இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்று பப்லு தொடர்பாக நிகழ்ச்சி நடத்தியது. அதில் பேசிய அவரது நண்பரும், நடிகருமான ராகவ், 'நான் ஒரு கார் வாங்கியிருந்தேன். எனவே நானும் ப்ரீத்தாவும் அதை முதன்முறையாக எடுத்துக்கொண்டு திருப்பதி செல்ல முடிவெடுத்தோம். பப்லுவும் எங்களோடு வந்திருந்தார். கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு திரும்பியபோது அவர்தான் காரை ஓட்டினார். அப்போது போக்குவரத்து காவல் துறையினர் எங்களை சோதனை செய்தார்கள். பப்லு குடித்திருக்கிறாரா என்றும் செக் செய்தார்கள்.
பப்லுவுக்கு குடி, சிகரெட் போன்ற பழக்கங்கள் இல்லை. அந்த மீட்டரை வைத்து செக் செய்த காவல் துறை அதிகாரி நீங்கள் போகலாம் என்று சொல்லிவிட்டார்கள். அப்போது பப்லுவோ மது அருந்திய மாதிரி விளையாட்டாக போதையில் பேசியபடி காரை எடுத்துவிட்டார். அவர் இப்படி போதையில் பேசியதும் அந்த அதிகாரிக்கு ஒன்றுமே புரியவில்லை. நாங்களோ காருக்குள் இருந்தபடி விழுந்து விழுந்து சிரித்தோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











