Raghava lawrence: ரசிகர்களின் ஆசிர்வாதத்தை கேட்கும் ராகவா லாரன்ஸ்.. எதுக்கு தெரியுமா?
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத் நடிப்பில் வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது சந்திரமுகி 2.
இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், மைசூர் உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமான அரண்மனைகளிலும் அரண்மனை செட் அமைக்கப்பட்டும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்களை கடந்த சில நாட்களுக்கு முன்பே படக்குழுவினர் துவங்கியுள்ளனர்.

ரசிகர்களின் ஆதரவை கேட்கும் ராகவா லாரன்ஸ்: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் பி வாசு இயக்கியுள்ள படம் சந்திரமுகி 2. இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 2005ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது- ரஜினியின் கேரியர் பெஸ்ட் படமாக அமைந்த சந்திரமுகி படத்தில் ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு உள்ளிட்டவர்களும் இணைந்திருந்தனர். இந்தப் படத்தில் நடித்த அனைவருக்குமே சிறப்பாக கைக்கொடுத்தது சந்திரமுகி.
தற்போது அடுத்தடுத்த படங்களின் இரண்டாவது பாகங்கள் உருவாகி வெற்றிப்படங்களாக அமைந்து வருகின்றன. அந்த வகையில், சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகமும் 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உருவாகி ரிலீசுக்கும் தயாராகி வருகிறது. இந்தப் படத்தையும் முதல் பாகத்தை தயாரித்த பி வாசுவே இயக்கியுள்ளார். வடிவேலுவை தவிர்த்து முதல் பாகத்தில் இருந்தவர்கள் யாரும் இந்தப் படத்தில் இணையவில்லை. மாறாக ரஜினிக்கு பதிலாக நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டிவரும் ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் லீட் கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. ஐதராபாத், மைசூர் உள்ளிட்ட இடங்களின் பிரம்மாண்டமான அரண்மனைகளிலும அரண்மனை செட் போடப்பட்டும் படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில், வரும் செப்டம்பர் 15ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு படம் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ள இந்தப் படத்தில் ஆஸ்கர் நாயகன் எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார். அவரது இசையில் படத்தின் இரண்டு பாடல்கள் அடுத்தடுத்து லிரிக் வீடியோ பாடல்களாக வெளியாகியுள்ளன.

படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் முன்னதாகவே துவங்கியுள்ளனர். படத்தில் லாரன்ஸ் மற்றும் கங்கணாவின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட், அச்சம் என பல்வேறு சுவைகளை படத்தின் முதல் பாகம் கொடுத்த நிலையில், ரஜினியின் ரோலில் ராகவா லாரன்ஸ் எப்படி நடித்திருப்பார் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு நாளைய தினம் சென்னையில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து முன்னதாகவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். நாளைய தினம் நடைபெறவுள்ள இசை வெளியீட்டிற்கு ரசிகர்களின் ஆசிர்வாதங்கள் வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் படத்தில் அவரும் கங்கணாவும் இணைந்துள்ள புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் வேட்டையன் லுக்கில் மாஸ் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











