சகோதரா.. உங்கள் குழந்தைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்.. தீப்பெட்டி கணேசன் மறைவு.. லாரன்ஸ் உருக்கம்!

சென்னை: நடிகர் தீப்பெட்டி கணேசன் மரணத்தை தொடர்ந்து அவரது குழந்தைகளை தான் கவனித்துக் கொள்வதாக நடிகர் லாரன்ஸ் தெரிவித்திருப்பது நெகிழ வைத்துள்ளது.

ரேனிகுண்டா, பில்லா 2, தென்மேற்கு பருவகாற்று, நீர்ப்பறவை, கோலமாவு கோகிலா என சில படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்தவர் நடிகர் தீப்பெட்டி கணேசன்.

கடைசியாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய கண்ணே கலைமானே படத்தில் நடித்திருந்தார் தீப்பெட்டி கணேசன். இந்நிலையில் கடந்த ஆண்டு அமலில் இருந்த ஊரடங்கு காரணமாக பட வாய்ப்புகள் இல்லாமல் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார்.

பிரபலங்கள் உதவி

பிரபலங்கள் உதவி

தனக்கு அஜித் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டு வீடியோ வெளியிட்டிருந்தார் தீப்பெட்டி கணேசன். அவரது வீடியோ பெரும் வைரலானது. இதனை பார்த்த திரைத்துரை பிரபலங்கள் பலரும் அவருக்கு உதவினர். சினேகன், ராகவா லாரன்ஸ் என பலரும் தீப்பெட்டி கணேசனுக்கு உதவி செய்தனர்.

மாரடைப்பால் மரணம்

மாரடைப்பால் மரணம்

இந்நிலையில் நடிகர் தீப்பெட்டி கணேசன் திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். கடந்த 10 நாட்களாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தீப்பெட்டி கணேசன், நேற்று சிகிச்சைப் பலனின்றி காலமானார்.

உருக்கமான பதிவு

உருக்கமான பதிவு

அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தீப்பெட்டி கணேசனுக்கு இரங்கல் தெரிவித்து உருக்கமான ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார்.

என்னால் இயன்றளவு

என்னால் இயன்றளவு

நடிகர் தீப்பெட்டி கணேசன் இறைவனடி சேர்ந்தார் என்ற தகவலை கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்ததேன். இவ்வருடம் அவரின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொண்டு செய்தேன், இனிவரும் காலத்திலும் என்னால் இயன்றவரையிலான உதவிகளை அவரின் குழந்தைகளுக்கு செய்வேன்.

நெகிழ வைக்கும் பதிவு

நெகிழ வைக்கும் பதிவு

கணேசனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். சகோதரா நான் உங்களின் குழந்தைகளை பார்த்துக்கொள்கிறேன்.. உங்கள் ஆன்மா இளைப்பாறட்டும் என பதிவிட்டுள்ளார். லாரன்ஸின் இந்த நெகிழ வைக்கும் பதிவை பார்த்த நெட்டிசன்கள் லாரன்ஸுக்கு நன்றி கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X