Chandramukhi 2: சந்திரமுகி 2 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. பெரிய தொகையாம்!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களுடன் படமாக்கப்பட்டுள்ளது சந்திரமுகி 2.
அதிகமான எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் விநாயகர் சதுர்த்தியையொட்டி ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் ராகவா லாரன்சின் வேட்டையன் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சந்திரமுகி 2 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே களமிறங்கியுள்ள படம் சந்திரமுகி 2. இந்தப் படத்தினை இயக்குநர் பி வாசு இயக்கியுள்ள நிலையில், படத்தின் சூட்டிங் மைசூர், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் பிரம்மாண்டமான அரண்மனைகளிலும் பிரம்மாண்ட செட்கள் போடப்பட்டும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தியையொட்டி படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 2005ம் ஆண்டில் வெளியான சந்திரமுகி படம் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு என முன்னணி நட்சத்திரங்களுடன் பி வாசு இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படத்தில் ரஜினி -வடிவேலு காம்பினேஷன் காமெடி காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்தது. படத்தின் வெற்றிக்கும் முக்கியமான காரணமாக அமைந்தது. இந்நிலையில் தற்போது வடிவேலு சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்சுடன் இணைந்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் தன்னுடைய காஞ்சனா உள்ளிட்ட படங்களில் அதிகமாக காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருப்பார். மேலும் ஹாரர் காமெடி படங்கள் என்றால் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல. இந்நிலையில் தற்போது மீண்டும் சந்திரமுகி 2வில் ஹாரர் காமெடி களத்தில் களமிறங்கியுள்ளார் இந்தப் படமும் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் படத்தில் அவருடன் பாலிவுட் குயின் கங்கணா ரனாவத் இணைந்துள்ளதும் இந்தப் படத்தின் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.
ரஜினியின் சந்திரமுகி படத்தில் முக்கியமான கேரக்டராக பிளாஷ்பேக்கில் வேட்டையன் என்ற கேரக்டர் வரும். இந்த கேரக்டர் படத்தின் பிரதானமான கேரக்டராக அமைந்த நிலையில், தற்போது சந்திரமுகி 2 படத்திலும் இந்த கேரக்டர் அமைந்துள்ளது. இன்று வெளியாகியுள்ள சந்திரமுகி 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ராகவா லாரன்சை வேட்டையன் லுக்கில் பார்க்க முடிந்தது. இந்த போஸ்டர் ரசிகர்களை மிரட்டியுள்ளது.
இந்நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் டிஜிட்டல் ரைட்சை மிகப்பெரிய தொகைக்கு நெட்பிளிக்ஸ் கைப்பற்றியிருந்தது. இந்நிலையில் தற்போது படத்தில் சாட்டிலைட் உரிமையை சன் டிவி மிகப்பெரிய விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு இந்தப் படம் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











