Chandramukhi 2: நெட்பிளிக்சில் வெளியான சந்திரமுகி 2.. ட்ரெண்டிங்கில் நம்பர் 1.. சூப்பர்ல!

சென்னை: நடிகர் ரஜினி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டரில் நடித்து வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகமாக சந்திரமுகி 2 வெளியானது.

இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், மஞ்சிமா மோகன், கங்கனா ரனாவத், வடிவேலு, லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

Actor raghava lawrence Chandramukhi 2 movie trending #1 in Netflix

கடந்த செப்டம்பர் 28ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் சிறப்பான வசூலை ஈட்டியுள்ளது.

சந்திரமுகி படம்: நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியான சந்திரமுகி படம் மிகப்பெரிய ஹிட்டடித்து ரஜினி கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது 18 ஆண்டுகள் கழித்து கடந்த செப்டம்பர் 28ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு, ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

கங்கணா ரனாவத்: முதல் பாகத்தில் ஜோதிகா உடலில் சந்திரமுகியின் ஆவி புகுந்து படாத பாடு படுத்துவதாக காட்டப்பட்ட நிலையில், இந்த பாகத்தில் ஜோதிகாவிற்கு பதிலாக லட்சுமி மேனன் கேரக்டரில் சந்திரமுகி புகுந்துக் கொள்வதாக காட்டப்பட்டது. மேலும் சந்திரமுகி நேரடியாகவும் ஆட்டம் காட்டுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த கேரக்டரில் நடிகை கங்கணா ரனாவத் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சிறப்பாக அமைந்தது.

நெட்பிளிக்சில் சந்திரமுகி 2: இந்நிலையில், இந்தப் படம் கடந்த 26ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. இந்தப் படத்தை சினிமாவில் பார்த்தவர்களும் பார்க்க தவறியவர்களும் படத்தை ஓடிடியில் பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் நெட்பிளிக்சில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. படத்தை தொடர்ந்து ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கலவையான விமர்சனங்கள்: படத்தில் சந்திரமுகி படத்தை நினைவுப்படுத்தும் வகையில் பல காட்சிகள் அமைந்துள்ளன. வடிவேலு -ரஜினி காமெடியை டூப்ளிகேட் செய்யும் விதமான காட்சிகளும் சந்திரமுகி 2 படத்தில் அமைந்திருந்தன. பல காட்சிகள் சலிப்பூட்டும் வகையில் அமைந்திருந்த நிலையில், படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆயினும் தனக்கேயுரிய பல சிறப்பம்சங்களை படத்தில் சேர்த்திருந்தார் இயக்குநர் வாசு.

நெட்பிளிக்சில் முதலிடம்: இதையடுத்து படம் ரசிகர்களுக்கு சிறப்பான என்டர்டெயின்மெண்டை கொடுத்தது. இதையடுத்து தற்போது இந்தப் படம் ஓடிடியிலும் அதிகமான பார்வைகளை பெற்று வருகிறது. முதல் பாகத்தில் வேலை நிமித்தமாக பிரபு குடும்பத்தினர் சந்திரமுகி அரண்மனைக்குள் செல்வதாக காட்டப்பட்ட நிலையில், இந்த பாகத்தில் தங்களின் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வதற்காக ராதிகா குடும்பத்தினர் சந்திரமுகி அரண்மனைக்கு செல்வதாக காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X