twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுஜித் மீண்டும் வருவான்... பெற்றோருக்கு ராகவா லாரன்ஸ் ஆறுதல்

    |

    Recommended Video

    Vairamuthu Kavithai For Surjith : சுர்ஜித்திற்காக வைரமுத்து கவிதை எழுதியுள்ளார்-வீடியோ

    சென்னை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது குழந்தை சுஜித் 82 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான். சிறுவன் சுஜித் மரணம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. சிறுவன் சுஜித்தின் மறைவை ஒட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் இரங்கல் அறிக்கை ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    சுஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். சுஜித்தை போல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஏதாவது ஒரு பிள்ளையை தத்தெடுத்து அந்த பிள்ளைக்கு சுர்ஜித் எனப் பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதோடு நிற்காமல், அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன், என்று ராகவா லாரன்ஸ் தன்னுடைய துக்கத்தை, மனவேதனையுடன் தெரிவித்தார்.

    Actor Raghava Lawrence condoles the death of boy Sujit

    நடிகர் ராகவா லாரன்ஸ் அக்டோபர் 29ஆம் தேதியான இன்று தனது பிறந்த நாளை கொண்டாட வில்லை. ஒட்டு மொத்த தேச மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் அனைத்து மதங்களையும் சார்ந்த மக்களின் நம்பிக்கையையும், பிரார்த்தனையையும் மீறி, அனைவரின் கண்களையும் குளமாக்கிவிட்டு சென்றவிட்ட சிறுவன் சுஜித்தின் மரணத்தை ஒட்டி தன்னுடைய பிறந்த நாள் விழாவை ரத்து செய்துவிட்டார். அதோடு சுஜித்தை இழந்து தவிக்கும் அவனது குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்கும் வகையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் அறிக்கை விடுத்துள்ளார்.

    சுஜித்திற்கு இரங்கல்


    அதில், ஒட்டுமொத்த தேசத்தின் கண்களையும் குளமாக்கி விட்டு சென்று விட்டான் சுஜித். அவனை உரிய நேரத்தில் அரவணைக்கத் தவறிய காலமும், இங்குள்ள சூழலும் வேதனைக்குரியது. இந்நிலையில் சுஜித்தின் பெற்றோருக்கு சொல்ல விரும்புவது. சுஜித் இன்று நம் தேசத்தின் பிள்ளையாகி விட்டான். சுஜித்தை போல் இந்தத் தேசமெங்கும் எத்தனையோ பிள்ளைகள் பெற்றோரின்றி இருக்கிறார்கள். அவர்களில் ஏதாவது ஒரு பிள்ளையை தத்தெடுத்து அந்த பிள்ளைக்கு சுஜித் எனப் பெயரிட்டு வளர்க்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

    அதன் மூலம் ஒரு குழந்தைக்கு நீங்கள் வாழ்க்கை கொடுத்ததாகவும் இருக்கும். சுஜித்தின் ஆத்மாவும் சாந்தியடையும். சுஜித்தும் தங்களுடனே இருப்பான். அப்படி நீங்கள் குழந்தையை தத்தெடுக்க நினைத்தால் நானே குழந்தையை தத்தெடுத்துக் கொடுக்கிறேன். அதோடு நிற்காமல், அவன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்கிறேன், என்று ராகவா லாரன்ஸ் தன்னுடைய துக்கத்தை, மனவேதனையுடன் தெரிவித்தார்.

    நானா.. நடிகனா.. இப்பக் கூட என்னால நம்ப முடியலை.. இதுதாங்க ஷாருக் கானின் சக்ஸஸ் பார்முலா!நானா.. நடிகனா.. இப்பக் கூட என்னால நம்ப முடியலை.. இதுதாங்க ஷாருக் கானின் சக்ஸஸ் பார்முலா!

    ராகவா லாரன்ஸ் இதை போல் பல சமயங்களில் பலருக்கு ராகவா அறக்கட்டளையின் கீழ் உதவியுள்ளார். ராகவா லாரன்ஸ் மாற்றுத் திறனாளிகளுக்கென தொண்டு நிறுவனமும் நடத்தி வருகிறார். அதோடு, தான் இயக்கி நடிக்கும் படங்களிலும் அவர்களை நடிக்க வைத்து அவர்களுடைய திறமையை உலகிற்கு அறிமுகபடுத்தி மகிழ்ச்சி அடைவார்.

    ஒரு முறை விஜய்யின் போக்கிரி பட வெற்றி விழாவில் கூட, தனது மாற்றுத் திறனாளி நண்பர்களுடன் வந்த ராகாவா லாரன்ஸ், விஜய்யின் மூலம் மேடையிலே நிதி திரட்டினார். ராகவா லாரன்ஸ் பல ஏழைகளுக்கும் ஏழை குழந்தைகளுக்கும் பல்வேறு சமயங்களில் உதவி உள்ளார். இப்போதும் அதே போல் சுஜித் மறைவை ஒட்டி, அவரது பெற்றோர்க்கு உதவும் நோக்கில் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    English summary
    Actor Raghava Lawrence posted a condolence statement on his Twitter account following the death of the boy Sujit. In it, Sujit has become the child of our nation. Like Sujit, there are so many children in this country without parents. Raghava Lawrence mentioned that one of them would adopt a child and name him as Sujit.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X