கடைசி மூச்சு இருக்கும் வரை இவங்களுக்காக இருப்பேன்.. ராகவா லாரன்ஸ் உருக்கம்!

சென்னை: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடிகர் ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, தனது காப்பகத்தில் இருக்கும் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் லக்‌ஷ்மி பாம் படத்தை இயக்கி வரும் லாரன்ஸ் தமிழில் ரங்கஸ்தலம் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என்ற தகவல்கள் அண்மையில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடைசி மூச்சு இருக்குற வரைக்கும்

இவர்கள் என் வாழ்க்கை பயணத்தில் ஒரு அங்கமாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது கடைசி மூச்சு இருக்குற வரைக்கும் இவங்களுக்காக இருப்பேன் என மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ராகவா லாரன்ஸ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

சினிமாவிலும்

சினிமாவிலும்

நிஜ வாழ்க்கையில் மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு உதவி வரும் ராகவா லாரன்ஸ் அவர்களை, சினிமாவிலும் அறிமுகப்படுத்தியுள்ளார். முனி, காஞ்சனா உள்ளிட்ட பல படங்களில் ரியல் மாற்றுத்திறனாளிகளை தனது பாடல்களில் ஆட வைத்து அழகு பார்த்துள்ளார். காஞ்சனா 2வில் நடிகை நித்யா மேனனை, மாற்றுத்திறனாளி ஹீரோயினாக நடிக்க வைத்ததெல்லாம் உண்மையிலேயே வேற லெவல்.

ஐ லவ் யூ தலைவா

கேரளாவை சேர்ந்த மாற்றுத் திறனாளி பிரனவ், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். ரஜினியின் தீவிர ரசிகரான பிரனவின் ஆசையை ரஜினி நிறைவேற்றி வைத்துள்ளார். அந்த புகைப்படத்தை பகிர்ந்த ராகவா லாரன்ஸ் ஐ லவ் யூ தலைவா என பதிவிட்டுள்ளார்.

வேற லெவல்

ராகவா லாரன்ஸ் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவை பார்த்த நெட்டிசன்கள், அவரை வாழ்த்தி கமென்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். நீங்க வேற லெவல் சார் என நடிகர் விஜய்யின் புகைப்படத்தை போட்டு இந்த தளபதி ரசிகர் பாராட்டியுள்ளார்.

இளைஞர்களின் இன்ஸ்பிரேஷன்

உங்களின் இதுபோன்ற செயல்கள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. நாங்களும் பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டுகிறது என இந்த ரசிகர் கமென்ட் செய்துள்ளார்.

லக்‌ஷ்மி பாம்

லக்‌ஷ்மி பாம்

காஞ்சனா 3 படத்தை தொடர்ந்து காஞ்சனா படத்தை இந்தியில் லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார் லாரன்ஸ். அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி நடிப்பில் உருவாகி வரும் அந்த படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X