டாப் இயக்குநர்களை எல்லாம் அடித்துத் தூக்கிய லாரன்ஸ்.. அந்த படத்திற்கு அத்தனை கோடிகளா சம்பளம்?

சென்னை: நடிகர் லாரன்ஸ் காஞ்சனா 2 இந்திப்படத்திற்கு பெற்ற சம்பளம் குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

Recommended Video

Pandian stores Kathir Huge help | Raghava Lawrence emotional Tweet

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ். நடிகர் மட்டுமின்றி முன்னணி இயக்குநராகவும் வலம் வருகிறார் லாரன்ஸ்.

1999ஆம் ஆண்டு ஸ்பீடு டான்ஸர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்தார் லாரன்ஸ்.

காஞ்சனா

காஞ்சனா

பின்னர் அற்புதம் படத்தின் மூலம் நாயகனாக நடிக்க தொடங்கினார் லாரன்ஸ். 2007 ஆம் ஆண்டு முனி என்ற படத்தை இயக்கி நடித்தார் லாரன்ஸ். ஹாரர் காமெடியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து முனி 2 என காஞ்சனா படத்தை கடந்த 2011ஆம் ஆண்டு இயக்கி நடித்திருந்தார்.

காஞ்சனா படங்கள்

காஞ்சனா படங்கள்

அந்தப் படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு முனி 3 என காஞ்சனா 2 படத்தை கடந்த 2015ஆம் ஆண்டு டைரக்ட் செய்தார். அதன்பின் முனி 4 என காஞ்சான 3 படத்தை கடந்த ஆண்டு இயக்கி நடித்திருந்தார்.

குழந்தைகள் விருப்பம்

குழந்தைகள் விருப்பம்

இந்த படங்கள் அனைத்துமே சக்கைப் போடு போட்டன. பேய் படங்களாக இருந்தாலும் காமெடி கலவையில் இருந்தால் குழந்தைகளால் அதிகம் விரும்பப்பட்டது. குடும்பத்தினருடன் பார்க்கக்கூடிய வகையில் இருந்ததால் ஃபேமிலி ஆடியன்ஸின் ஆதரவையும் பெற்றது இப்படம்.

லட்சுமி பாம்

லட்சுமி பாம்

இந்தப் படங்கள் வசூலிலும் 100 கோடியை தாண்டி சாதனை படைத்தது. இதனால் காஞ்சனா படங்களை ரீமேக் செய்ய பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சனா 2 படத்தை லட்சுமி பாம் என்ற பெயரில் அக்ஷய் குமாரை வைத்து பாலிவுட்டில் ரீமேக் செய்கிறார் லாரன்ஸ்.

ரூ. 50 கோடி சம்பளம்

ரூ. 50 கோடி சம்பளம்

இதில் கியாரா அத்வானி அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்திற்காக நடிகர் லாரன்ஸ் 50 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் சங்கர் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் மட்டுமே 20 கோடியில் இருந்து 30 கோடி வரை சம்பளம் பெற்று வருகின்றனர்.

ஏழைகளுக்கு செலவு

ஏழைகளுக்கு செலவு

இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் அவர்களை விட அதிகம் சம்பளம் பெரும் இயக்குநராக வளர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. எவ்வளவு சம்பளம் பெற்றாலும் அதில் ஒரு பகுதியை ஏழை மக்களுக்காகவும் மாற்றுத் திறனாளிகளுக்காகவும் செலவு செய்து வருகிறார்.

ரூ. 3 கோடி அறிவிப்பு

ரூ. 3 கோடி அறிவிப்பு

அண்மையில் கொரோனாவுக்காக பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான ஃபெஃப்ஸி அமைப்புக்கு 50 லட்சம் ரூபாய், நடனக் கலைஞர்கள் சங்கத்திற்கு 50 லட்சம் ரூபாய் மற்றும் மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கு 25 லட்சம் ரூபாயும் தினக்கூலிகள் மற்றும் தான் பிறந்த இடமான ராயபுரம் தேசிய நகர் பகுதியை சேர்ந்த ஏழை மக்களுக்கு 75 லட்சம் ரூபாய் என 3 கோடி ரூபாய் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X