Raghava lawrence: மீண்டும் படம் இயக்கும் ராகவா லாரன்ஸ்.. ஹீரோவும் அவர்தான்!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாகியுள்ளது.

இந்தப் படத்தில் ராகவா லாரன்சின் நடிப்பு அதிகமான வரவேற்பை பெற்றிருந்தது. காமெடி கேரக்டர்களில் அதிகமான நடித்துவந்த அவருக்கு இந்தப்படம் சிறப்பாக அமைந்தது.
நடிகர் ராகவா லாரன்ஸ்: நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா படங்களின்மூலம் தன்னை சிறப்பான இயக்குநராக நடிகராக, தயாரிப்பாளராக வெளிப்படுத்தியவர். காமெடி ஹாரர் ஜானரில் வெளியான இநத்ப் படங்கள் ரசிகர்களுக்கு நல்ல என்டர்டெயின்மெண்டை கொடுத்தது. கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் வசூலை குவித்தது. இதனிடையே மற்ற இயக்குநர்களின் டைரக்ஷனில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் ராகவா லாரன்ஸ்.
அடுத்தடுத்த படங்கள்: சமீபத்தில் இவரது நடிப்பில் அடுத்தடுத்த சந்திரமுகி 2 மற்றும் ஜிகர்தண்டா XX படங்கள் வெளியாகின. இதில் சந்திரமுகி 2 படத்தை இயக்குநர் பி வாசு இயக்கியிருந்தார். கங்கணா ரனாவத், லட்சுமி மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த இந்தப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தாலும் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியான முதல் பாகத்தை போல இரண்டாவது பாகம் ரசிகர்களை கவரத் தவறியது.
ஜிகர்தண்டா XX படம்: இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ராகவா லாரன்சின் ஜிகர்தண்டா XX படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, நிமிஷா, சத்யன் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார். இந்தப் படமும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகமாகவே வெளியானது. இந்நிலையில் காமெடி கேரக்டர்களிலேயே தொடர்ந்து நடித்துவந்த ராகவா லாரன்சிற்கு இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.
அடுத்தப்பட வேலைகளில் பிசி: இந்நிலையில் தற்போது தன்னுடைய அடுத்தப்பட வேலைகளில் தற்போது ராகவா லாரன்ஸ் துவங்கியுள்ளார். அடுத்ததாக அவர் தன்னுடைய இயக்கம் மற்றும் நடிப்பில் புதிய படத்திற்கான டிஸ்கஷனை துவங்கியுள்ளார். இந்தப் படத்தின் டிஸ்கஷனை அவர் தற்போது பாண்டிச்சேரியில் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தை ராகவா லாரன்சே தயாரிக்கவுள்ளதாகவும் கூறுப்படுகிறது.
பன்முகம் காட்டும் ராகவா லாரன்ஸ்: நடன இயக்குநராக தன்னுடைய திரையுலக பயணத்தை துவங்கியவர் ராகவா லாரன்ஸ். விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்துள்ள இவர், தொடர்ந்து இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையை வெளிப்படுத்தினார். சமூக செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டுவரும் இவர் அறக்கட்டளை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பது போன்ற செயல்களையும் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











