கவலைப்படாதீங்க ப்ரோ.. நான் இருக்கேன்.. அந்த மனசுதான் சார்.. பிரபல நடிகருக்கு குவியும் பாராட்டு!
சென்னை: காலேஜ் பீஸ் கட்டமுடியாமல் கஷ்டப்படுவதாக கூறிய டிவிட்டரில் உதவிக்கேட்ட மாணவர்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் உதவி செய்ததை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற லாரன்ஸ், நடிகர் கமல்ஹாசன் போஸ்டரில் சாணியடித்ததாக பேசியது சர்ச்சையை உண்டாக்கியது.
இதனால் கடுப்பான கமல் ரசிகர்கள் அவரை காய்ச்சி எடுத்தனர். இதனை தொடர்ந்து தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விளக்கமளித்த லாரன்ஸ், கமலை சந்தித்து நடந்ததை கூறி விளக்கமளித்தார்.

சீமான் ஆதரவாளர்கள்
அப்போது சீமான் பெயரை குறிப்பிடாமல் அவர் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சீமான் ஆதரவாளர்கள் கோபத்திற்கு ஆளானார்.
கவலைப்படாதீங்க புரோ
இந்நிலையில் காலேஜ் பீஸ் கட்ட முடியாமல் கஷ்டப்பட்ட மாணவர்கள் சிலர் ராகவா லாரன்ஸிடம் உதவிக்கேட்டனர். இதனை பார்த்த லாரன்ஸ், கவலைப்படாதீங்க புரோ.. உங்களுக்கு அண்ணனாக நான் இருக்கிறேன்.. உங்கள் கல்லூரி தகவல் மற்றும் கட்டணம் குறித்த தகவல்களை வழங்குங்கள் என்று கூறி உதவ முன்வந்தார்.
நீங்களும் உதவனும்
இதேபோல் டிப்ளமோ நர்ஸிங் படிக்கும் மாணவர் கேட்ட உதவிக்கும் உதவுவதாக தெரிவித்தார் லாரன்ஸ். மேலும் நீங்கள் படித்து முடித்து வாழ்க்கையில் பெற்ற பின் நீங்களும் இதுபோன்று மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
ஹேட்ஸ் ஆஃப்
லாரன்ஸின் இந்த டிவிட்டை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டியிருக்கின்றனர். சார் நிஜமாவே நான் உங்களுடைய பெரிய ஃபேன் சார், ஹேட்ஸ் ஆஃப் சார் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
திருவருள் காக்கும்
என்றும் இறை திருவருள் சூழ்ந்து காக்கும் அண்ணா என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
உங்களை போல்
அண்ணா நீங்க வேற லெவல்
உங்கள மாதிரி தான் ஆகனும் நா நம்ம இந்திய இளைஞர்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
நம்பிக்கையை தந்துவிடும்
சூப்பர் நண்பா ஒருவர் உதவி என்று வரும்போது நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்று சொல்வதே அவனுக்கு பாதி நம்பிக்கையை தந்துவிடும்... என்கிறார் இவர்.
மனசுதான் சார் கடவுள்
அந்த மனசுதான் சார் கடவுள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











