சந்திரமுகி 2.. ஜிகிர்தண்டா 2.. முன்னணி படங்களில் இணைந்த லாரன்ஸ்.. காட்டுல மழைதான்!
சென்னை : நடிகர், இயக்குநர், நடன இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவராக ராகவா லாரன்ஸ் தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.
தமிழில் நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
ரஜினி நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகத்தில் அவர் தற்போது நடித்து வருகிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் நடன இயக்குநராகத்தான் கோலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு தமிழ், தெலுங்கு என சிறப்பான நடனம் அமைத்து வரவேற்பை பெற்றார். விஜய்க்கு இவர் நடனம் அமைத்த தாம்தக்க தையத்தக்க பாடல் எவர்கீரின் ரகம்.

பன்முக திறமை
இந்நிலையில் அடுத்ததாக தன்னை நடிகராகவும் இயக்குநராகவும் மாற்றிக் கொண்டு காஞ்சனா சீரிஸ் படங்களை கொடுத்த இவர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என தனது எல்லைகளை மேலும் பெரிதாக்கிக் கொண்டார். இவரது காஞ்சனா படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ருத்ரன் படம்
இந்நிலையில் மற்ற இயக்குநர்களின் படங்களிலும் ராகவா லாரன்ஸ் தற்போது நடிக்கத் துவங்கியுள்ளார். பிரபல தயாரிப்பாளர் கதிரேசனின் இயக்கத்தில் லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படம் வரும் டிசம்பர் 23ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்ப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மிரட்டலான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

சந்திரமுகி 2 படம்
இதனிடையே டைரக்டர் பி வாசுவின் இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் இணைந்துள்ளார் லாரன்ஸ். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது மைசூருவில் துவங்கி பிரம்மாண்டமான அளவில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் ஹீரோயின் குறித்து இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் படத்தில் வடிவேலு இணைந்துள்ளார்.

இரண்டாவது பாகத்தில் லாரன்ஸ்
இந்தப் படத்தின் முதல் பாகம் ரஜினிகாந்த், ஜோதிகா மற்றும் நயன்தாரா, பிரபு, வடிவேலு நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது பாகத்தில் லாரன்ஸ் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. தன்னுடைய படங்களில் ஆக்ஷன், காமெடி என பட்டையை கிளப்பும் லாரன்ஸ் இந்தப் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

ஜிகிர்தண்டா 2 படத்தில் லாரன்ஸ்
இதனிடையே, இன்றைய தினம் ஜிகிர்தண்டா 2 படத்திற்கான அறிவிப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்திலும் ராகவா லாரன்ஸ்தான் கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. படத்திற்கான ஸ்கிரிப்ட் வொர்க் தற்போது துரித கதியில் நடைபெற்று வருவதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் சூட்டிங்?
ஜிகிர்தண்டா 2 படத்தின் சூட்டிங் இந்த ஆண்டு அக்டோபரில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். ஜிகிர்தண்டா படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.
Recommended Video

அடுத்தடுத்த சிறப்பான படங்கள்
அடுத்தடுத்து சந்திரமுகி 2, ஜிகிர்தண்டா 2 என இரண்டு பெரிய பட்ஜெட் படங்களில் ராகவா லாரன்ஸ் இணைந்துள்ளார். அவரது ருத்ரன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது அடுத்தடுத்த படங்களால் அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











