Raghava lawrence: விஜயகாந்த் மகன் படத்தில் இணைந்த ராகவா லாரன்ஸ்.. சொன்னபடி நடந்த ஹீரோ!
சென்னை: நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் கடந்த ஆண்டின் இறுதியில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்தின் மரணம் தமிழகத்தில் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விஜயகாந்தின் மரணம் அவரது மகன்களை மிகப்பெரிய அளவில் பாதித்ததை அவரது இறுதிச்சடங்கின்போது அனைத்து தரப்பினரும் பார்க்க முடிந்தது. அவர்கள் கண்ணீர் விட்டு கதறியதைப் பார்த்த அனைவரும் கண்கலங்கினர்.
இந்நிலையில் விஜயகாந்திற்கு இறுதி மரியாதை செலுத்திய நடிகர் ராகவா லாரன்ஸ் அவரது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கத் தயார் என்று தெரிவித்திருந்தார். இதேபோல நடிகர் விஷாலும் இறுதி அஞ்சலியின்போது அறிவித்தார். இந்நிலையில் தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ், சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ள ராகவா லாரன்ஸ் 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் அன்பு இயக்கி வருகிறார்.

நடிகர் விஜயகாந்த்: நடிகர் மற்றும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினரை மட்டுமில்லாமல் அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது இறுதி அஞ்சலி பல்வேறு தரப்பினரின் கண்ணீருடன் நடந்தது. தேமுதிக அலுவலத்திலேயே அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி அஞ்சலியின்போது ஏராளமான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் கண்ணீருடன் காணப்பட்டனர். இதனிடையே அவரது மகன்களும் கதறி அழுததை பார்த்த அனைவரும் வருந்தினர்.
விஜயகாந்த் மறைவு: விஜயகாந்தின் உடலுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர்கள் விஷால் மற்றும் ராகவா லாரன்ஸ் உள்ளிட்டவர்கள் அவரது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கத் தயார் என்று தெரிவித்திருந்தனர். தற்போது சண்முக பாண்டியன் படை தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அன்பு இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்பே துவங்கியது. இதன் அடுத்தக்கட்ட சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.
விஜயகாந்த் மகன் படத்தில் ராகவா லாரன்ஸ்: இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்காக அவர் மூன்று நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார். தற்போது ராகவா லாரன்சின் கேரக்டரை இணைக்கும் பொருட்டு படத்தின் ஸ்கிரிப்டில் மாற்றங்களை இயக்குநர் அன்பு மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. விஜய், சூர்யா உள்ளிட்டவர்கள் முன்னேறிவந்த காலகட்டத்தில் அவர்களை தூக்கி நிறுத்தியவர் விஜயகாந்த். இந்நிலையில் அவரது மகனின் சினிமா கேரியரை விஜய் கருத்தில் கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் மறைவின்போது விமர்சனங்கள் எழுந்தன.
ரசிகர்கள் வரவேற்பு: இந்நிலையில் ராகவா லாரன்ஸ் அந்தப்பணியை தற்போது மேற்கொண்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் விஜயகாந்த் ரசிகர்களிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது. சண்முக பாண்டியன் -ராகவா லாரன்ஸ் கூட்டணி எப்படிப்பட்ட வரவேற்பை கொடுக்கும் என்று பொருத்திருந்து பார்க்கலாம். கடந்த 2015ம் ஆண்டிலேயே சகாப்தம் என்ற படத்தின்மூலம் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் விஜயகாந்தும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. இதையடுத்து தமிழன் என்று சொல் என்ற படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் திரில்லர் கதைக்களத்தில் படை வீரன் படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











