Lawrence with Lokesh: லோகேஷ் கனகராஜூடன் இணையும் லாரன்ஸ்.. ஹீரோயின் யாரு தெரியுமா?
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநர், டான்ஸ் மாஸ்டர், இசையமைப்பாளர் என சினிமாவில் பன்முகம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதனிடையே அடுத்ததாக வரும் 15ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படம் ரிலீசாகவுள்ளது.

லோகேஷ் கனகராஜூடன் இணையும் லாரன்ஸ்: நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னுடைய கேரியரை நடன இயக்குநராகத்தான் துவங்கினார். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்துள்ளார் லாரன்ஸ். தொடர்ந்து முனி படம் மூலம் நடிகராகவும் தன்னுடைய பயணத்தை துவங்கி, இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என மாஸ் காட்டி வருகிறார். இவரது காஞ்சனா படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்து அடுத்தடுத்த பாகங்களில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.
தன்னுடைய இயக்கத்தில் மட்டுமில்லாமல் மற்ற இயக்குநர்களின் டைரக்ஷனிலும் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கி தன்னை நிரூபித்து வருகிறார் லாரன்ஸ். சமீபத்தில் இவரது நடிப்பில் ருத்ரன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லாரன்ஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் ரிலீசாக உள்ளது சந்திரமுகி 2. பி வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 15ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது.
இந்தப் படம் ரிலீசாக இன்னும் முழுமையாக இரு வாரங்கள்கூட இல்லாத நிலையில், படத்தின் பிரமோஷன்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. லைகா தயாரிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் லாரன்சுடன் கங்கணா ரனாவத், வடிவேலு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஆஸ்கர் நாயகன் கீரவாணி இசையமைத்துள்ள நிலையில், அடுத்தடுத்து மூன்று பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி அதிரடி சரவெடியாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சமீபத்தில் படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. நிகழ்ச்சியில் லாரன்ஸ், கங்கணா ரனாவத் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் படத்திலும் லாரன்ஸ் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் அதிகமான வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இந்த இரு படங்களும் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ள நிலையில் லாரன்சின் அடுத்தப்படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ராகவா லாரன்ஸ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அடுத்ததாக தான் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் இணையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை சந்தானத்தின் குலுகுலு படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கவுள்ளார். காமெடியை மட்டுமே நம்பி படங்களில் நடித்துவரும் சந்தானத்தை இந்தப் படம் வித்தியாசமாக காட்டியது குறிப்பிடத்தக்கது. இவர் லோகேஷின் உதவி இயக்குநராக மாஸ்டர், விக்ரம் படங்களில் பணியாற்றியுள்ளார்.
ராகவா லாரன்ஸ் -ரத்னகுமார் இணையும் இந்த புதிய படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதத்தில் படத்தின் சூட்டிங் பூஜையுடன் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதியுள்ள லோகேஷ் கனகராஜ் படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இந்தப் படத்தில் ராகவா லாரன்சிற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா கமிட்டாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











