Soundarya Rajini: அடுத்தப்பட டைரக்ஷனுக்கு தயாராகும் சவுந்தர்யா ரஜினிகாந்த்.. அட இவர்தான் ஹீரோவா!

சென்னை: ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் இளையமகள் சௌந்தர்யா உள்ளிட்ட இருவரும் இயக்குநர்களாக உள்ளனர். இதில் ஐஸ்வர்யா இயக்கத்தில் 3, வை ராஜா வை போன்ற படங்கள் முன்னதாக வெளியான நிலையில் தற்போது தன்னுடைய தந்தை கேமியோ ரோலில் நடிக்க லால் சலாம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். படம் வரும் 9ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீடு நடைபெற்றபோது சவுந்தர்யா ரஜினிகாந்தும் தன்னுடைய அக்காவின் வெற்றிப் பயணத்தில் பங்கேற்றிருந்தார். சௌந்தர்யா ரஜினிகாந்தும் படங்களை இயக்குவதில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

அமேசான் பிரைம் நிறுவனத்துடன் இணைந்து வெப் தொடர் ஒன்றை சௌந்தர்யா ரஜினி தற்போது தயாரித்து வருகிறார். நோவா ஆப்ரஹாம் இயக்கிவரும் இந்தத் தொடருக்கு கேங்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அசோக் செல்வன் இந்த தொடரில் நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்கத்திலும் கவனம் செலுத்தவுள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸ் லீட் கேரக்டரில் நடிக்கவுள்ள புதிய படத்தைதான் அவர் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Actor Raghava lawrence joined with director Soundarya Rajinikanth in his next

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்கள் இருவருமே இயக்குநர்களாக உள்ளனர். சினிமாவில் தங்களை நிரூபிக்கும் முயற்சியில் அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகின்றனர். ஆனாலும் குடும்பம், குழந்தைகள் என்று கவனம் செலுத்தி வருவதால் முழுநேர இயக்குநர்களாக முடியாமல் உள்ளனர். தனுஷுடனான பிரிவிற்கு பிறகு தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி. படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ கேரக்டரில் நடித்துள்ளார். படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் நடந்த நிலையில், நேற்றைய தினம் படத்தின் ட்ரெயிலரை வெளியிட்ட படக்குழு, பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்தி முடித்துள்ளது.

இயக்குநர் சௌந்தர்யா ரஜினி: இதனிடையே ரஜினிகாந்தின் இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்தும் சினிமாவில் தொடர்ந்து தன்னை நிரூபித்து வருகிறார். முன்னதாக ரஜினிகாந்த் லீட் கேரக்டரில் நடித்திருந்த கோச்சடையான் மற்றும் தனுஷ் நடிப்பில் விஐபி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். குசேலன், கோச்சடையான் படங்களில் கேமியோ ரோலிலும் நடித்துள்ளார். தயாரிப்பாளராக கோவா படத்தை தயாரித்துள்ள சௌந்தர்யா தற்போது அமேசான் பிரைம் நிறுவனத்துடன் இணைந்து வெப் தொடர் ஒன்றை தயாரித்து வருகிறார். நோவா ஆப்ரஹாம் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த தொடருக்கு கேங்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. அசோக் செல்வன் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார்.

ராகவா லாரன்சை இயக்கும் சௌந்தர்யா: இதனிடையே குடும்பம், குழந்தை என செட்டிலான சௌந்தர்யா ரஜினி, தற்போது மீண்டும் இயக்கத்தை கையிலெடுக்கவுள்ளார். இவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தில் ராகவா லாரன்ஸ் லீட் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. படத்தில் இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மான் அல்லது ஜிவி பிரகாஷ் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தற்போது அதிகாரம் என்ற படத்தில் நடித்துவரும் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக இந்தப் படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஐபி 2 இயக்குநர்: தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகிவரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை முன்னதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தனுஷ் இந்தப்படத்தின் கதையை எழுதியிருந்தார். இதற்கான நடிகர்கள், நடிகைகள் தேர்வும் நடந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணத்தால் இந்தப் படம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது தனுஷே படத்தை தன்னுடைய சொந்த தயாரிப்பில் உருவாக்கி வருகிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்க முடியாத நிலையில்தான் விஐபி 2 படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X