ராஜக்கண்ணு மனைவியின் காலில் விழுந்து ஆசி பெற்ற நடிகர் லாரன்ஸ்... வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: ராஜக்கண்ணு மனைவி பார்வதியை நேரில் சந்தித்த நடிகர் லாரன்ஸ் அவரது காலில் விழுந்து ஆசி பெற்றுள்ளார்.

டிஜெ ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ஜெய்பீம். இந்தப் படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் அண்மையில் அமேஸான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது. இருளர் இன மக்கள் காவல் துறையினரால் சந்திக்கும் துயரங்களை பேசுவதாக உள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

கமல் பாராட்டு

கமல் பாராட்டு

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பாராட்டி வருகின்றனர். இதேபோல் நடிகர் கமல்ஹாசன் படத்தை பார்த்து கண்கள் குளமானதாக கூறி படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

13 ஆண்டுகளுக்கு பிறகு

13 ஆண்டுகளுக்கு பிறகு

இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் காட்டப்பட்ட ராசாக்கண்ணு மீது பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது.

சொந்த செலவில் வீடு

சொந்த செலவில் வீடு

ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தாங்கள் பட்ட கஷ்டங்களை கூறியிருந்தார். தற்போது தான் மிகவும் வறுமையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ், ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக அறிவித்தார்.

காலில் விழுந்த லாரன்ஸ்

காலில் விழுந்த லாரன்ஸ்

இந்த நிலையில் பார்வதி அம்மாளை நேரில் சென்று சந்தித்துள்ளார் ராகவா லாரன்ஸ். அவரைப் பார்த்ததும் நீங்கள் என்னுடைய பாட்டி போலவே இருக்கின்றீர்கள் என்றும், என்னுடைய பாட்டி இப்போது உயிரோடு இல்லை, ஆனால் உங்கள் வடிவத்தில் என்னுடைய பாட்டியை நான் பார்க்கிறேன் என்று கூறி அவருடைய காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார் ராகவா லாரன்ஸ்.

Recommended Video

இந்த வருஷம் 8 படம் பண்றேன் | Actor Jeeva Ravi Chat Part-02 | Filmibeat Tamil
வைரலாகும் போட்டோக்கள்

வைரலாகும் போட்டோக்கள்

மேலும், எனக்கு அம்மா மற்றும் கடவுள் மீது தான் மிகுந்த நம்பிக்கை உள்ளது. சூர்யா அவர்களின் முயற்சியினால் தான் இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் வீடு கட்ட தேவையான நிதியையும் அளித்துள்ளார் லாரன்ஸ். ராகவா லாரன்ஸ், பார்வதி அம்மாளை சந்தித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X