Raghava lawrence: ரஜினியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்.. வாழ்த்தும் சொல்லியிருக்காரு!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் ட்ரெயிலர்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் அடுத்தடுத்த ப்ரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களை சந்தித்து பிரம்மாண்டமான பிரமோஷனை செய்துள்ளனர்.

சந்திரமுகி 2 படத்தின் ரிலீசையொட்டி ரஜினியை நேரில் சந்தித்து ஆசிபெற்ற லாரன்ஸ்: நடிகர் ராகவா லாரன்ஸ் நடன இயக்குநராக தன்னுடைய கேரியரை துவங்கி தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என அடுத்தடுத்த தளங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர். இவரது காஞ்சனா படங்கள் வரவேற்பையும் கலவையான விமர்சனங்களையும் ஒருசேர பெற்றவை. இந்தப் படங்களில் பேயை காமெடியாக்கி ரசிகர்களை கவர்ந்த ராகவா லாரன்ஸ், அதே விஷயத்திற்காகத்தான் விமர்சனங்களையும் பெற்றார்.
தற்போது மற்ற இயக்குநர்கள் இயக்கத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. வரும் செப்டம்பர் 28ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. படத்தில் லாரன்சுடன் கங்கணா ரனாவத், மஹிமா நம்பியார், லட்சுமி மேனன், ராதிகா சரத்குமார், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ரிலீஸ் கடந்த வாரத்திலேயே திட்டமிடப்பட்ட நிலையில், செப்டம்பர் 28ம் தேதிக்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் காட்சிகள் காணாமல் போனதாக படத்தின் இயக்குநர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தின் ரிலீசையொட்டி அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். கோவை, ஐதராபாத் என ராகவா லாரன்ஸ் பறந்து பறந்து பிரமோஷன்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் நேரில் சென்று சந்தித்துள்ளார் ராகவா லாரன்ஸ். இந்த சந்திப்பின்போது சந்திரமுகி 2 படத்தின் ரிலீசையொட்டி அவரிடம் ஆசி பெற்றுள்ளார் லாரன்ஸ். மேலும் ரஜினியின் ஜெயிலர் வெற்றிக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படங்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள லாரன்ஸ், தலைவர் எப்பவும் க்ரேட் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த 2005ம் ஆண்டில் வெளியான சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் லீட் கேரக்டரில் நடித்திருந்தார். ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த நிலையில், பி வாசு இயக்கத்தில் வெளியான இந்தப் படம் சூப்பர்ஹிட்டடித்தது. இந்நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத் லீட் கேரக்டர்களில் நடித்து படம் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











