Raghava lawrence: சந்திரமுகி ஆட்டம் ஆரம்பம்.. களத்திற்கு தயாரான வேட்டையன்!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் சந்திரமுகி 2.
கடந்த 2005ம் ஆண்டில் இதன் முதல் பாகம் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க வெளியானது.

இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது பி வாசு இயக்கத்தில் வெளியாகவுள்ளது. செப்டம்பர் 15ம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி படம் ரிலீசாகவுள்ளது.
சந்திரமுகி ஆட்டம் ஆரம்பம் என ட்வீட் செய்த ராகவா லாரன்ஸ்: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது சந்திரமுகி 2 படம். இந்தப் படத்தை முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு மைசூர், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் உள்ள பிரம்மாண்ட அரண்மனைகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 15ம் தேதி விநாயகர் சதுர்த்தியையொட்டி படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் துவக்கிய நிலையில், லாரன்ஸ், கங்கணா ரனாவத்தின் வேட்டையன், சந்திரமுகி கேரக்டர் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து படத்தின் இரு பாடல்கள் அடுத்தடுத்து லிரிக் வீடியோவாக வெளியாகி மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படத்திற்கு ஆஸ்கர் மற்றும் தேசிய விருதுகளை வென்றுள்ள எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதற்கு கீரவாணியும் காரணமாக அமைந்த நிலையில், இந்தப் படம் பல தூங்காத இரவுகளை கொடுத்ததாக அவர் முன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும் படத்தில் மொத்தமாக 10 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடக்கவுள்ளது.
இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பே படக்குழு சார்பில் அறிவிப்பு வெளியானது. படத்தின் நாயகன் ராகவா லாரன்சும் இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முன்னதாக அப்டேட் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் நடிகர் ராகவா லாரன்சும் இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். சந்திரமுகியின் ஆட்டம் ஆரம்பம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தின் பிரமோஷன்களிலும் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இன்றைய தினம் இத்தகைய ஒரு பிரமோஷனுக்காக ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், கீரவாணி மற்றும் பி வாசு ஆகியோர் இணைந்துள்ளனர். இதுகுறித்து படத்தின் நாயகி கங்கணா ரனாவத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











