Raghava Lawrence: காஞ்சனா 4 படத்திற்கு தயாரான ராகவா லாரன்ஸ்.. சூட்டிங் எப்ப தெரியுமா?

சென்னை: மீண்டும் பேய்களை வரவேற்க கோலிவுட் தயாராகிவிட்டது. சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகிய அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 100 கோடி கிளப்பில் இணைந்து வெற்றிப்படமாகியுள்ளது. இடையில் சிறிது காலங்கள் காமெடி பேய்கள் இல்லாமல் இருந்த ரசிகர்கள் தற்போது மீண்டும் இதுபோன்ற படங்களுக்கு தயாராகிவருகின்றனர்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளுடன் கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கும் ராகவா லாரன்ஸ் அடுத்ததாக காஞ்சனா 4 என்ற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் துவங்க உள்ளதாக தற்போது கூறப்பட்டுள்ளது.

Raghava Lawrence Kanchana 4 movie tamil cinema 4

நடிகர் ராகவா லாரன்ஸ்: நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்த இயக்குனர்களுடனும் தன்னுடைய இயக்கத்திலும் படங்களில் நடித்து வருகிறார்/ கோலிவுட்டில் நடிகர். இயக்குனர். தயாரிப்பாளர் என பன்முக திறமை காட்டி வரும் ராகவா லாரன்ஸ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் அடுத்ததாக காஞ்சனா 4 படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் துவங்க உள்ளதாக லாரன்ஸ் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை தான் நிறைவு செய்து விட்டதாகவும் அதையொட்டி அடுத்தடுத்த வேலைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

காஞ்சனா படங்கள்: முனி படத்தின் மூலம் ஹாரராக இருந்த பேய்களை காமெடியன்களாக மாற்றிய பெருமை ராகவா லாரன்ஸுக்கு உண்டு. இதை தொடர்ந்து காஞ்சனா படம் மூலமும் அவர் காமெடி களத்தில் பேய்களை உலவ விட்டிருந்தார். இந்த ட்ரெண்ட் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் வொர்க் அவுட் ஆனது. காஞ்சனா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. காஞ்சனா படத்தில். சரத்குமார். ராய் லட்சுமி, கோவை சரளா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த நிலையில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை சென்றடைந்தது. அடுத்தடுத்து காஞ்சனா 2 மற்றும் காஞ்சனா 3 படங்களையும் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருந்தார். இநத்ப் படங்களும் ரசிகர்களை கவர்ந்திருந்தன.

மீண்டும் பேய் ட்ரெண்ட்: இதையடுத்து பேய் ட்ரெண்டிலிருந்து விடுபட்ட கோலிவுட், அடுத்தடுத்து அழுத்தமான கதைக்களங்களில் படங்களை கொடுத்து வருகிறது. ராகவா லாரன்சும் ஆக்ஷன் படங்களில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனிடையே, சுந்தர் சி இயக்கத்தில் சமீபத்தில் அரண்மனை 4 படம் வெளியாகி மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்துள்ளது. இந்நிலையில் மீண்டும் காஞ்சனா படத்தை கையில் எடுக்க ராகவா லாரன்ஸ் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் துவங்க உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து ராகவா லாரன்ஸ் விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

ரசிகர்கள் உற்சாகம்: இந்தப் படமும் அவரது சொந்த தயாரிப்பில் உருவாகும் என்று கூறப்பட்டுள்ளது. காஞ்சனா படங்களின் முந்தைய பாகங்களில் ராய் லக்ஷ்மி, டாப்சி, நித்யா மேனன், ஓவியா உள்ளிட்ட நடிகைகள் இணைந்திருந்த நிலையில் காஞ்சனா 4 படத்தில் மிருணாள் தாக்கூர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தி நடிகையான மிருணாள் தாக்கூர், தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். இந்நிலையில் இவர் தமிழில் இணையவுள்ளது குறித்து ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் இது உண்மையல்ல என்று ராகவா லாரன்ஸ் தெளிவுப் படுத்தியிருந்தார். விரைவில் நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X