Lawrence :சினிமாவில் லாரன்சின் ஆல்-டைம் ப்ரெண்ட் யார் தெரியுமா.. அவரு சொன்னா ஓடி வருவாராம்!

சென்னை : நடிகர் ராகவா லாரன்சின் ருத்ரன் படம் நேற்றைய தினம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

ஆக்ஷன் த்ரில்லராக வெளியாகியுள்ள இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் லாரன்சின் ஜோடியாக நடித்துள்ளார்.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் முதல் நாளிலேயே அதிகமான வசூலை பெற்றுள்ளது.

லாரன்சின் ஆல்-டைம் பேவரைட் நண்பர் : நடிகர் ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகியுள்ளது ருத்ரன். இந்தப் படம் வெளியாவதில் இறுதிவரை சிக்கல்கள் காணப்பட்ட நிலையில், நேற்றைய தினம் திட்டமிட்டபடி படம் ரிலீசானது. இந்நிலையில் அதிரடி ஆக்ஷன் படமாக வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதிலும் முதல் நாளிலேயே அதிரடி வசூலை பெற்றுள்ளது.

Actor Raghava lawrence opens up about his all-time favourite frine in Cinema industry

இந்தப் படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த நிலையில், நேற்றைய தினம் இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. படத்தில் நாசர், காளி வெங்கட், சரத்குமார், சச்சு உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் ஆந்திரா, தெலங்கானாவிலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், முதல் நாளிலேயே 5 கோடி ரூபாய் வரையில் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாரிசு, துணிவு, வாத்தி, பத்துதல படங்களின் வரிசையில் முதல் நாளிலேயே அதிக வசூலை குவித்துள்ள படங்களின் வரிசையில் இந்தப் படம் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. தமிழ் புத்தாண்டையொட்டி நேற்றைய தினம் சுமார் 8 படங்கள் வெளியான நிலையில், ருத்ரன் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப்படம் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் மட்டுமே 400 திரையரங்குகளில் படம் ரிலீசாகியுள்ளது.

Actor Raghava lawrence opens up about his all-time favourite frine in Cinema industry

இதனிடையே இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக ராகவா லாரன்ஸ் கொடுத்திருந்த பேட்டியொன்றில் அவரது ஆல்டைம் பேவரைட் நடிகர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த லாரன்ஸ், நடிகர் விஜய்தான் தன்னுடைய ஆல்டைம் பேவரைட் நடிகர் என்று தெரிவித்துள்ளார். விஜய் கூப்பிட்டால் தான் எங்கிருந்தாலும் உடனடியாக வந்து விடுவேன் என்றும் கூறியுள்ளார். மேகமாய் வந்து போகிறேன் பாடலில் துவங்கிய இந்த நட்பு தற்போதுவரை தொடர்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் அமைதி தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய அறக்கட்டளைக்கு உதவி தேவைப்பட்டாலோ, தன்னுடைய குழந்தைகள் விஜய் படத்தை பார்க்க விரும்பினாலோ, கூப்பிடும் தூரத்தில் உதவி செய்ய விஜய் தயாராக இருப்பார் என்றும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து பல பாடல்களில் பணிபுரிந்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து ஆடியுள்ள தாம்தக்க பாடல் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X