Raghava lawrence: வேட்டையன் கேரக்டரை செய்யும்போது பயமாக இருந்தது.. லாரன்ஸ் சொன்னதை பாருங்க!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது சந்திரமுகி 2. படத்தின் ப்ரமோஷன்கள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் நேற்றைய தினம் சந்திரமுகி 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு லைகா நிறுவனர் சுபாஷ்கரன் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.

Actor Raghava lawrence opens up about Vettaiyan character in Chandramukhi 2 audio launch

வேட்டையன் கேரக்டரில் நடிக்க பயப்பட்ட ராகவா லாரன்ஸ்: நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது சந்திரமுகி. இந்தப் படம் மலையாளத்தில் ஷோபனா நடிப்பில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற மணிசித்திரத் தாழ் என்ற படத்தின் ரீமேக்காக உருவானது. ஆனால் தமிழ் ஆடியன்ஸ் மற்றும் ரஜினிக்காக படத்தில் அதிகமான மாற்றங்களை செய்து இயக்கியிருந்தார் பி வாசு. படத்தில் ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட், மிரட்டல் என பல்வேறு அம்சங்களும் அதிகமாக காணப்பட்டன. படம் சூப்பர் ஹிட்டடித்தது.

சமீப காலங்களில் வெற்றிப்படங்களின் இரண்டாவது பாகங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகமும் தற்போது உருவாகியுள்ளது. படத்தில் ரஜினிக்கு பதிலாக நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், டான்ஸ் மாஸ்டர் என கோலிவுட்டில் பன்முகம் காட்டிவரும் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக களமிறங்கியுள்ளார். இந்தப் படம் துவங்குவதற்கு முன்னதாகவே நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து ஆசி பெற்று வந்தார் லாரன்ஸ். அந்த வகையில் தற்போது படம் முழுமையாக நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

வரும் செப்டம்பர் 15ம் தேதி விநாயகர் சதுர்த்தி ரிலீசாக வெளியாகவுள்ளது சந்திரமுகி 2. படத்தில் லாரன்சுடன் கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். ஐதராபாத், மைசூர் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் பிரம்மாண்டமான அரண்மனைகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு ஆஸ்கர் நாயகன் எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார். அவரது இசையில் அடுத்தடுத்து இரு பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், வடிவேலு, லைகா சுபாஷ்கரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் படத்தின் துவக்கம் முதலே தலைவர் ரஜினிகாந்தின் ஆசியுடன் தான் இந்தப் படம் நடந்தது என்றும் தலைவரை தான் நேரில் சந்தித்து ஆசி பெற்றதாகவும் தெரிவித்தார். மேலும் தற்போது இசை வெளியீட்டிற்கு முன்னதாகவும் அவருடன் பேசியதாகவும் குறிப்பிட்டார். மேலும் ரஜினியின் சிறப்பான வேட்டையன் கேரக்டரை செய்யும்போது தனக்கு பயம் இருந்ததாகவும் குறிப்பட்டார்.

சந்திரமுகி படத்தில் ரஜினி வேட்டையன் கேரக்டரை சிறப்பாக செய்திருந்த நிலையில், அந்த கேரக்டரை தான் செய்யும் போது அவரது பெயரை கெடுத்துவிடக்கூடாது என்ற பயம் தனக்கு இருந்ததாகவும் லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டில் பேசியுள்ளார். சூப்பர்ஸ்டாரின் ஆசியுடன் படம் சிறப்பாக நிறைவடைந்துள்ளதாக கூறிய லாரன்ஸ், ரஜினிகாந்திற்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். படத்தில் ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X