இதுதான் எங்கள் தலைவர்.. பாஸிட்டிவிட்டி பாசம்.. ரஜினியை கொண்டாடும் லாரன்ஸ்!
சென்னை: நடிகர் ரஜினிக்காந்தை புகழ்ந்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ்.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்தின் ரசிகரான முரளி என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அந்த நேரத்திலும் தலைவா உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என உருக்கமாக டிவிட்டி தனது போட்டோவுடன் ரஜினியை டேக் செய்திருந்தார்.

கண்டிப்பா வீட்டுக்கு வாங்க
இதனை பார்த்த நடிகர் ரஜினிக்காந்த், முரளி உங்களுக்கு ஒன்னும் ஆகாது கண்ணா, ஆண்டவன வேண்டிக்கிறேன் தைரியமா இருங்க குணமடைஞ்சதும் குடும்பத்தோட கண்டிப்பா வீட்டுக்கு வாங்க என்று பேசி ஆடியோ வெளியிட்டிருந்தார்.

நடிகர் லாரன்ஸ்
இந்த ஆடியோ நேற்று இணையம் முழுக்க தீயாய் பரவியது. பல மீடியாக்களிலும் இது தொடர்பான செய்திகள் இடம் பெற்றன. இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் ரஜினிக்காந்தின் அந்த ஆடியோவை ஷேர் செய்துள்ளார். மேலும் அவரை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

லவ் யு தலைவா
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, இதுதான் எங்கள் தலைவர்.. பிரச்சனையில் இருக்கும் ஒரு ரசிகரை கவனிக்கத் தவறாதவர். நான் இந்த ஆடியோவைக் கேட்கும்போது, அது அதிக பாஸிட்டிவிட்டியையும் பாசத்தையும் தருகிறது. அந்த ரசிகர் அதை எப்படி உணர்ந்திருப்பார் என்று கற்பனை செய்து பாருங்கள்! லவ் யு தலைவா குருவே சரணம்.. என குறிப்பிட்டுள்ளார்.

நடிகை வேதிகா
நடிகர் லாரன்ஸின் இந்த பதிவை ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர். லாரன்ஸின் இந்த டிவிட்டை பார்த்த நடிகை வேதிகா, அவர் மிகவும் கனிவானவர், சிறந்த மனிதர் என புகழ்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











