Raghava lawrence: பணம் வேணாம்னு சொன்னதுக்கு இதுதான் காரணம்.. லாரன்ஸ் பகிர்ந்த தகவல்!
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
விநாயகர் சதுர்த்தியையொட்டி ரிலீசாகவுள்ள சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீடு கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.
பி வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்டர்கள், வீடியோக்கள், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

அறக்கட்டளை நிதியுதவி குறித்து ராகவா லாரன்ஸ் புதிய வீடியோ: நடிகர் லாரன்ஸ் டான்ஸ் மாஸ்டராக தன்னுடைய கேரியரை சினிமாவில் துவக்கியவர். முன்னணி நடிகர்களான விஜய் உள்ளிட்டவர்களுடன் இணைந்து இவர் கொரியோகிராப் செய்திருந்த தாம் தக்க உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் வரிசையில் தற்போதும் இடம்பெற்றுள்ளன. டான்ஸ் மாஸ்டராகவே தன்னுடைய கேரியரை நிறுத்திக் கொள்ளவில்லை லாரன்ஸ். தொடர்ந்து நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என தன்னுடைய பன்முகத் திறமைகளை சினிமாவில் சிறப்பாக வெளிக்காட்டி ஜெயித்துள்ளார்.
டான்ஸ் மாஸ்டராக இருந்தபோதே, அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி ஆதரவற்றவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் அதிகமான உதவிகளை செய்து வந்த லாரன்ஸ், தன்னுடைய வீட்டிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு டான்ஸ் பயிற்சி கொடுத்து அதன்மூலம் ஏராளமான திறமைகளை வெளிக்கொண்டு வந்தவர். பல மேடை நிகழ்ச்சிகளில் இவரது பயிற்சியில் உருவான ஆளுமைகளை அவர்களின் திறமைகளை ரசிகர்களின் பார்வைக்கும் இவர் கொடுத்துள்ளார்.
துவக்கத்தில் வெளிநபர்களிடமும் நிதியுதவி பெற்று, தன்னுடைய அறக்கட்டளை பணிகளை சிறப்பாக செய்துவந்த லாரன்ஸ் ஒருகட்டத்தில் நடிப்பு, தயாரிப்பு என பிசியாகி, தன்னுடைய நிதி நிலைமை சிறப்பான போது, வெளி நபர்களிடம் இருந்து நிதி பெறுவதில்லை என்ற தீர்மானத்தை வெளிப்படுத்தினார். தன்னுடைய சொந்த காசிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதை உறுதிப்படுத்தினார்.
ஆனாலும் இவரது அறக்கட்டளைக்கு தொடர்ந்து நிதி கிடைத்து வருகிறது. சமீபத்தில் லைகா நிறுவனமும் 1 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது லாரன்ஸ் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், தன்னுடைய அறக்கட்டளைக்கு யாரும் நிதி அளிக்க வேண்டாம் என்பதை மீண்டும் உறுதியுடன் வெளிப்படுத்தியுள்ளார். நடன மாஸ்டராக இருந்தபோது, தனக்கு அந்த அளவிற்கு வருமானம் இல்லாததால் மற்றவர்களிடம் உதவி பெற்றதாகவும் தற்போது தன்னுடைய நிதி நிலைமை மேம்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தான் நடிப்பு, தயாரிப்பு என பிசியாகியுள்ளதாகவும் வருடத்திற்கு மூன்று படங்களை செய்து வருவதாகவும் தன்னுடைய நிதி நிலைமை சிறப்பாக உள்ளதாகவும் அதனால்தான் தனக்கு நிதி தேவையில்லை என்று தான் கூறியதாகவும் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு கொடுக்க வேண்டாம் என்று மட்டுமே கூறியதாகவும் ஆனால், நிதி அளிப்பவர்கள், கஷ்டப்படும் ட்ரஸ்டுகளுக்கு தங்களின் நிதியை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இவ்வாறு கஷ்டப்படுபவர்களை சுட்டிக்காட்ட தான் தயாராக உள்ளதாகவும் லாரன்ஸ் மேலும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











